மே 31வரை ஊரடங்கு நீடிப்பு..
சலூன்களுக்கு அனுமதி..
சென்னை, மே :
தமிழகதத்தில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதே சமயம் 25 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட் டுள்ளது.
ஏற்கெனவே மளிகை, காய்கனி கடைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழக்கப்பட்டுள்ளது. ஆனால் சலூன் கடை களுக்கு அனுமதி வழங்கப் படாமல் இருந்தது. இதை யடுத்து அத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட சலூன் கடைக் காரர்களுக்கு ரூ 2ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
மேலும் ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித் துள்ளது. அதேசமயம் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கண்டிப்பாக அமல் படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது
ஆனால் கொரோனா பரவல் அதிகம் காணப்படும் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சலூன் கடை களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
# Barber shops, salons, markets except those located in containment zones allowed to reopen