மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அங்கு ஆட்சி காலம் முடியும் நிலையில் சட்டமன்ற தேர்தல் பல்வேறு கட்டங் களாக நடந்தது. மொத்தம் 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் வகித்து வருகிறது. அதற்கடுத்த படியாக பாஜக 83 இடங் களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
அரிதிபெரும்பாமை பெறும் மம்தா பேனர்ஜி மீண்டும் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் அஸ்ஸாமில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாரதி ஜனதா கட்சி அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.