மலர் தூவிய போர் விமானங்கள்..
கொரோனா வீரர்களுக்கு மரியாதை
புதுடெல்லி மே 3:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரா தாண்டவம் இன்னும் முடியாத நிலையில் அதனை எதிர்த்து உயிரை பணயம் வைத்து டாக்டர்கள், நர்ஸ்கள் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு சில மருத்துவர்களே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மருத்துவர்கள், செவிலியர் களுக்கு மரியாதை தரும் வகையில் மக்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய ராணுவமே கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் போர் வீரர்களான மருத்துவத்துறையினருக்கு மரியாதை செய்ய முடிவு செய்தது அதன்படி போர் விமானங்களில் பறந்தபடி கோரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது காஷமீர் முதல் கன்னியா குமரி வரை மலர் தூவப்படு கிறது.
போர் விமானங்கள். மலர் தூவி மரியாதை செய்யும் என்ற தகவலை என்ற தகவலை முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். அதன்படி இன்று நம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது மலர் தூவியது. அதேபோல் பல இடங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர் தூவின. சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவ மனை, ஸ்டான்லி மருத்துவ மனை மீது தாழ்வாக பறந்து ஹெலிகாப்டர்கள் மலர் தூவின. மேலும் கடல் பகுதியில் கப்பல்களில் மின் விளக்குகள் மின்ன வைத்தும் , சைரன்களை ஒலி எழுப்பியும் கோரோனா போர் வீரர்களுக்கு நன்றி செலுத்தப்படுகிறது.
#IAF conducts fly-pasts across India saluting “corona warriors”