Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஆச்சரியத்தக்க அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த உடனடி பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. கன்னியாகுமரியில் உள்ள பகபதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 29) துவங்கியது. முதல் கட்டப் பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைய இருக்கிறார்.

‘அவள்’ படத்தின் இசைக்காக வெகுவாக பாராட்டப்பட்ட இசையமைப்பாளரும், தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தின் இசையமைப்பாளருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்கு இசையமைக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்க, திவ்யா நாகராஜன் மற்றும் அனுவர்த்தன் ஆகியோர் ஆடையலங்காரத்தை கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விஜயகுமார்.

நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார். ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, மற்றும் ‘பப்பி’ ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து டாக்டர் ஐசரி கே.கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

Related posts

ஷாருக்கின் ‘ஜவான்” படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”

Jai Chandran

வில்லன் நடிகர் சலீம் கவுஸ் திடீர் மரணம்

Jai Chandran

“பேபி ஜான்” முதல் பாடல் நவம்பர் 25ல் வெளியாகிறது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend