தல அஜீத் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்..
தல அஜீத்துக்கு இன்று மே 1 பிறந்த நாள். கொரோனா தொற்று ஊரடங்கில் தனது பிறந்த நாள் விழாக்கள் கொண்டாட வேண்டாம், ஹேஷ்டேக் எதுவும் உருவாக்க வேண்டாம் என அஜீத் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனாலும் அஜீத்குமாரின் ரசிகர்கள் #HDBDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.
தளபதி விஜய் ரசிகர்களும் இம்முறை அஜீத்துக்கென #நண்பர் அஜீத் (#NanbarAjith) என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அஜீத்குமாருக்கு வாழ்த்து தெரி வித்துள்ளனர் இணைய தளத்தில் மோதிக் கொள்ளும் அஜீத், விஜய் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக ஹேஷ்டேக் உருவாக்கி வாழ்த்து பதிவிட்டிருப்பது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
#HDBDearestAjith #NanbarAjith #vijay #Ajith
#அஜீத் #விஜய்