தலைவர் பதவிக்கு ராமநாராயணன் மகன் potti
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் திரைப்பட சங்க தேர்தல் நடக்கிறது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் சங்க புதிய நிர்வாகி களுக்கான தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தர விட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சங்க தேர்தல் தேதி உள்ளிட்ட நடைமுறைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது தேர்தலில் களம் காண அணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தயாரிப்பாளர் மறைந்த இயக்குனர் ராம நாராயணன் மகன் என்.ராமசாமி என்கிற முரளி தலைமையில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி உருவாகி இருக்கிறது
அவரது அணி சார்பில் 2 செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர், , 2 துணை தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன், பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் இந்த அணி சார்பில் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு 21 பேர் போட்டியிட உள்ளனர்.
ஏற்கெனவே தயாரிப்பாளர் டி.சிவா தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி அறிவிக்கப்பட்டது இந்த 2 அணிகள் தவிர 3வது அணி உருவாகும் என்று கூறப்படுகிறது.
#Tamil Film Producer’s Protection Team Vs Tamil Film Producer’s Welfare Team