சுகாதார துறை செயலாளர் தகவல்..
சென்னை, மார்ச் :
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா mu, முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் அத்தியாவசிய பொருட் களுக்கு நேர கட்டுபாடுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றை முழுமை யாக கட்டுப்படுத்த முடிய வில்லை. கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறிய தாவது: இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுள்ள 43 ஆயிரத்து 538 பேர் தனி மைப்படுத்தப்பட்டிருக்கின் றனர். இன்று ஒரே நாளில் தமிழகத் தில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள். அதில் 10 மாத குழந்தைக்கம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து ஏற்கெனவே 42பேருக்கு தொற்று இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்திருக்கி றது.
89 பேர் பரிசோதனை முடிவுகளுக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர். 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள் ளனர்.
இவ்வாறு சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்
Corona :Tamil Nadu, state’s total now at 50