Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

“தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு

“தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு.

பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான்.
SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை லைவ்-ஆக அசத்தி இருக்கிறார் இளையராஜா.
2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை பாடல்களைக் கொண்ட படமாக தமிழரசன் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Related posts

ரேஷன் கடைகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்: முழு ஊரடங்கில் அரசு அனுமதி..

Jai Chandran

மறைந்த கேவி ஆனந்துக்கு கொரோனா தொற்று உறுதி.. உடல் தகனம் நடந்தது

Jai Chandran

ஜல்லிக்கட்டு விளையாட்டோடு பேட்டைக்காளி’ டிரைய்லர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend