Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

கொரோனா 3வது நிலைஎட்டாமல் தடுக்க வேண்டும்


திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:
கொரோனா ரோனா என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் நோய்ப் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும் – தற்போதைய கடும் நெருக் கடியில் இருந்து, ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன்றாட நடவடிக்கை களைத் தொடருவதற்கும், அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக் கைகளுக்கு திமுக சார்பில் எனது ஆதரவையும் ஒத்துழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன

தற்போது நாடு முழுவதும் நடைமுறை யில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. 

இந்நிலையில் ‘தனித்திருத்தல்’ என்பதே முதன்மையான தற்காப்பு நிலை என்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஒடிசா முதல்வர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும், பஞ்சாப் மாநில முதல்வர் மே 1-ஆம் தேதி வரையும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள்.ஆகவே, தமிழகத்திலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலுக்கு உட்பட்டுவிட்டதா என்பது குறித்து – தமிழக அரசும், மத்திய அரசும் தெரிவித்து வரும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரண்களாக உள்ளன. தமிழ்நாடு 2வது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட்டை யும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத் தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். மேலும், அதற்கான முன்னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக்காக்கப் போராடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தப் பட வேண்டும். முறையான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் அளிக்கப்பட வேண்டும்.

இது சுகாதார, மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல; சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல், எதிர்கால பிரச்னையாக மாறி வருகிறது. எனவே, இதுகுறித்து பல்வேறு குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப் பட்டு அவர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடிய வில்லை. கேட்ட நிதியை பெறு வதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு முனைய வேண்டும்.  எம்.பி தொகுதி நிதி ரத்து செய்திருப்பதை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். திமுக முழுஒத்துழைப்பு அளிக்கும் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

#DMK President MK.Stalin Sent Letter To TN CM Regarding Corona vairus Activite’s

#மு.க.ஸ்டாலின் கடிதம் #திமுக தலைவர்
#முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Related posts

காந்தாரா சேப்டர் 1 படத்தில் தில்ஜித் தோசாஞ் பாடல்

Jai Chandran

மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்..

Jai Chandran

Jawan becomes the first film to collect 300 Cr. in 6 days

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend