தமிழக கொரோனா: பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மாவட்டங்கள்
புதுடெல்லி, மே. 1:
கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பை மைய மாக வைத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டங்க ளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பிரித்து அறிவித்திருக்கிறது.
தமிழகத்தைப்பொறுத்தவரை சிவப்பு மாவட்டங்கள் 12, ஆரஞ்சு மாவட்டங்கள் 24, பச்சை மாவட்டம் 1(கிருஷ்ணகிரி )
மகாராஷ்டிராவில் சிவப்பு மாவட்டங்கள் 14 ஆரஞ்சு மாவட்டம் 16, பச்சை மாவட்டம் 6.
உத்தரப்பிரதேசத்தில் சிவப்பு மாவட்டம் 19. ஆரஞ்சு மாவட்டம் 36, பச்சை மாவட்டங்கள் 20.
கேரளாவில் சிவப்பு மாவட்டங்கள் 2, ஆரஞ்சு மாவட்டங்கள் 10, பச்சை மாவட்டங்கள் 2
புதுச்சேரி ஆரஞ்சு மாவட்டம் 1, பச்சை மாவட்டம் 3 சிவப்பு மாவட்டம் எதுவும் இல்லை
நாட்டில் கொரோனா இல்லாத பச்சை மண்டலங்கள் 319 ஆக அறிவிக்கப்பட் டுள்ளன. கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக் கும் ஆரஞ்சு மாவட்டங்கள் 284.கொரோனா தாக்கம் அதிகம் உள்ள சிவப்பு மாவட்டங்கள் 130 என வகைப்படுத்தப்பட்டுள்ளன
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு 3ம் தேதி முடிவடையும் நிலையில் இதுபோல் மூன்று வண்ணங்களில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டி ருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வண்ணங்களுக்கு ஏற்ப தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
#Full list of Red, Orange, Green zones for lockdown post May 3