தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரம் தாண்டியது..
அமைச்சர் தகவல்..
சென்னை மே : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று 805 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, ‘தமிழகத்தில் கொரோனாவை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சென்னையை தவிர மற்ற பகுதிகளில் நல்ல பலன் கிடைத்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்படிருக்கிறது. மொத்தமாக தமிழக த்தில் 17,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் 7 பேர் கொரோனா பாதிப்பில் இறந்துள்ளனர்’ என்றார்.
#Coronavirus cases in Tamil Nadu cross 17, 000