டாஸ்மாக் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..
குடிமகன்கள் ஹேப்பி..
புதுடெல்லி மே :
கொரோனா தொற்று பாதிப் பால் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கட்டுப்பாடு களுடன் மது கடை திறக்கசென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது. ஆனால் மறுநாளே கட்டுப்பாடுகளை மீறிய தாக கூறி ஊரடங்கு முடியும் வரை மது கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய் யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்க ஐகோர்ட் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தடை நீங்கியது.
டாஸ்மாக் மது கடைகள் நாளை முதல் திறக்கப்படு கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், ‘
உச்ச நீதிமன்ற ஆணையத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதி களில் மதுபானக்கடைகள் திறக்கப்படாது. மேலும், மால்கள் வணிக வளாகங் கள் மற்றும் நோய்க் கட்டுப் பட்டு பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது.
மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும். கடைக்கும் வரும் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
#Tasmac Opening From Tomorrow In Tamilnadu