படம்: டாணா
நடிப்பு:வைபவ். யோகிபாபு. நந்திதா சுவேதா
தயாரிப்பு: நோபல் மூவிஸ் புரொடக்ஷன்ஸ்
இசை: விஷால்சந்திரசேகர்
ஒளிப்பதிவு: சிவா
இயக்கம்: யுவராஜ் சுப்ரமணி
பிரிட்டிஷ் காலத்தில் ஆங்காங்கே கொள்ளை யர்கள் அட்டகாசம் அதிகரிக்கிறது. ஊருக்குள் புகுந்து ஆட்களை கொலை செய்துவிட்டு நகை. பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அவர்களை மடக்கிப்பிடித்து திருப்பி தாக்கி ஊர்மக்களை காக்கிறார் டாணாக்காரர். கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒழிக்க பிரிட்டிஷ் அரசு போலீஸ் படையை நியமிக் கிறது. அதில் ஊர் மக்களை காப்பாற்றிய டாணாக்காரையும் போலீஸாக நியமிக்கிறது. அன்று முதல் டாணாக்காரர் குடும்பத்திலி ருந்து ஒருவர் பரம்பர பரம்பரையாக போலீசாக வேலை செய்கி றார்கள். ஆனால் பாண்டியராஜன் குள்ளம் என்பதால் போலீஸ் ஆக முடியவில்லை இதை எண்ணி அவரது தந்தை மாரடைப்பில் இறக்கிறார். எப்படி யாவது தனக்கு பிறக்கும் பிள்ளையை போலீஸ் ஆக்குவேன் என்று சபதம் செய்கிறார் பாண்டியராஜன். அவருக்கு மகனாக பிறக்கி றார் வைபவ். சிறுவயதிலிருந்து போலீஸ் ஆகும் கனவுடன் வளர்கிறார். திடீரென்று ஏற்படும் பயத்தால் அவரது குரல் பெண்குர லாகி விடுகிறது. எப்போதெல்லாம் பயம், மகிழ்ச்சி, கோபம் ஏற்படுகிறதோ அவர் குரல் பெண்குரலாக மாறுகிறது. அதிலிருந்து மீண்டு போலீஸ் ஆகிறாரா என்பதே கதை.
பிரிட்டீஷ் காலத்தில் போலீஸாரை டாணாக் காரர் என்று அழைப்பார்கள் என்பதை படத்தின் தொடக்கத்திலிலேயே கிளியர் செய்துவிடும் இயக்குனர் ரசிகர்களை கதை யோடு ஒன்ற வைப்பதுடன் உயரமான அந்த டாணாக்காரர் சிலையை காட்டி போலீசுக்கு மரியாதை செய்திருக்கிறார்.
வந்தோமா நான்கு பாட்டுக்கு ஆடினோமா. ஒரு குத்தாட்டம்போட்டோமா என்று காலத்தை கழித்துக்கொண்டிருந்த வைபவுக்கு ஒரு நல்ல கதைக்களமாக அமைந்திருக்கிறது டாணா. அவரும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தனது குரல் பெண்குரலாக மாறியதால் கோபம் அடையும் வைபவ் சுடுகாட்டுக்கு சென்று பேய்களுக்கு சவால் விடுவதும் திடீரென்று எழும் சத்தங்களை கேட்டு பயப்படாததுபோல் சமாளிப்பதும் பரவாயில்லையே நல்லாவே சமாளிக்கிறாரே என்று நினைத்தால் அடுத்த சத்தத்துக்கு அங்கிருந்து ஒட்டம் பிடிப்பது தமாஷ்.
நந்திதாவுடன் ஏற்படும் காதல்தான் அவரை பெண்குரலிலிருந்து மீட்கப்போகிறது என்று எண்ணினால் கதையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு களத்தையே மாற்றியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
போலீஸ் வேலைக்கு தேர்வு எழுதி பாஸ் ஆகும் வைபவ் நேரடி தேர்வில் நீளம் தாண்டுதல். ரன்னிங் ரேஸில் ரெக்கார்ட் செய்து முதலிடம் வந்ததும் எப்படியும் போலீஸ் யூனிபார்ம் போட்டுவிடுவார் என்று எண்ண வைத்து திடீரென உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகி வெளியேறுவது ஏமாற்றம். பின்னர் போலீஸ் யூனிபார்ம் போடாமலே மர்மமாக நடக்கும் கொலை களை துப்பு துலக்குவது கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
நந்திதாவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை. படத்தில் வைபவுக்கு இணையாக கலக்குவது யோகிபாபுதான். அவர் வீசும் காமெடி பஞ்ச்கள் ரொம்பவே கைகொடுத்திருக்கிறது. அவ்வப்போது வரும் பேய் ஆட்ட காட்சிகள் வெறும் பயத்தினால் ஏற்படும் பிரம்மை என இயக்குனர் சொல்ல வருகிறாரா அல்லது உண்மையிலேயே பேய் இருக்கிறது என்று சொல்கிறாரா என்பது ரொம்பவே குழப்பம்.
கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் அதிகாரி யை மாட்டிவிடுவதற்காக அவசர அவசரமாக காட்சிகளை நகர்த்தியிருக்கி றார்கள். விஷால் சந்திரசேகரின் இசை படத்துக்கு பலம். ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் படத்தில் விறுவிறுப்புக்கும் கலகலப்புக்கும் குறைவில் லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக் குனர் யுவராஜ்சுப்ரமணி.
டாணாக்காரன்- சவால்காரன்.