ஜோர்டானிலிருந்து நடிகர் பிருதிவிராஜ் வீடு திரும்பினார்..
கொரோனா தடை வன வாசத்திலிருந்து விடுதலை..
நடிகர் பிருதிவிராஜ். இவர் தமிழில் கனா கண்டேன் படம் மூலம் அறிமுகமாகி மொழி, நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே போன்ற சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடிக்கும் இவர் ஆடுஜீவிதம் என்ற தனது லட்சிய படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதன் படப்பிடிப்பை ஜோர்டான் நாட்டில் நடத்த முடிவு செய்து படக் குழுவினருடன் புறப்பட்டு சென்றார். ஓரிரு நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று பரவாலால் அந்நாட்டு அரசு ஊரடங்கு பிறப்பித்தது.
இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது. ஊர் திரும்ப முயன்றாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வர முடியவில்லை. 2 மாதத்துக் கும் மேல் படக்குழு சிக்கி வனவாசம் அனுபவித்து வந்தது
பிருத்விராஜ் மனைவி, மகள் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நட்சத் திரங்கள கேரளா அரசுக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் பிரதிவிராஜ் மற்றும் படக்குழுவினர் விமானம் மூலம் மீட்கப்பட் டனர். அனைவரும் நேற்று மாலை கேரளா மாநிலம் கொச்சின் வந்து சேர்ந்தனர். படக்குழு வினரை கொரோனா தனிமைப்படுத்தலில் தனிமையில் இருக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்
#Prithviraj and team return to India from Jordan
#பிருத்விராஜ்