சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சியில் முழு ஊரடங்கு இன்று முடிகிறது..
6 மணி முதல் 5 மணிவரை கடைகள் இயங்கும்..
சென்னை, ஏப் :
கொரோனா தொற்று பரவாமலிருக்க ஏற்கெனவே இந்தியா முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலை யில் கடந்து 26ம் தேதி முதல் 29ம் தேதி (இன்று )காலை வரை 6 மணிமுதல் இரவு 9மணி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி களிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று இரவு 9 மணியுடன் முழு ஊரடங்கு முடிகிறது. ஆனால் ஏற்கெனவே 3ம் தேதிவரை அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு தொடர் கிறது. இதற்கிடையில் கடைகள் வழக்கம்போல் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.
இதுபற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ‘சென்னை, கோவை, மதுரை 3 மாநகராட்சிகளில் நாளை ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை கடைகள் இயங்கும்’.
முன்னதாக 4 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பித்தபோது அவசரமாக மக்கள் சமுக இடைவெளி கடைபிடிக்காமல் அவசரமாக பொருட்களை வாங்க வேண்டியி ருந்தது நாளை அதுபோல் அவசரமில்லாமல் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முககவசம் அணிந்து
காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கலாம்.
பிறகு மே 1ந்தேதி முதல் இந்த 3 மாநகராட்சிகளிலும் காலை 6 மணி முதல் 1 மணிவரை கடைகள் திறந்திருக்கும்’என தெரிவித்துள்ளார்.
#4-day lockdown in Chennai, Madurai, Coimbatore not to be extended: Tamil Nadu government
#எடப்பாடிபழனிசாமி