Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் செய்திகள்

சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது “வால்டர்” திரைப்படம் !

ஆரம்பிக்கப்பட்ட கணத்திலிருந்தே ஒவ்வொரு கட்டத்திலும், எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டே செல்கிறது “வால்டர்” திரைப்படம். சத்யராஜ் நடிப்பில் பெருவெற்றி பெற்ற “வால்டர்” தலைப்பில் அவர் மகன் சிபிராஜ் நடிக்க, தமிழ் சினிமாவின் திறமை மிக்க பல நடிகர்கள் இணைய, இசையை “வால்டர்” தேவாரம் அவர்கள் வெளியிட என ஒவ்வொரு கணத்திலும் ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்து வருகிறது “வால்டர்” திரைப்படம். சமூகத்திற்கு அவசியமான கருத்தை அழுத்தமாக சொல்லும் படமாக உருவாகியுள்ள “வால்டர்” படம் தற்போது சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் U.அன்பு கூறியதாவது…

இத்திரைப்படம் துவங்கப்பட்ட நாள் முதலாக படத்தை சுற்றி எப்போதும் நல்ல விசயமே நடந்து வருகிறது. தற்போது மேலும் ஒரு நல்ல அங்கீகாரம் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சமூகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியிருப்பதால் சென்சார் ஃபோர்டில் எங்கள் படத்திற்கு U/A சான்றிதழ் தான் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் சென்சார் ஃபோர்டில் படத்தின் அழுத்தமான கதையை சரியாக புரிந்துகொண்டு U சான்றிதழ் அளித்தார்கள். “வால்டர்” திரைப்படம் தமிழகத்தில் நடந்து வரும் குழந்தை கடத்தலை,
அதன் பின்னணியை களமாக கொண்டு அழுத்தமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தினமும் நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதும், செய்திதாள்களில் படிக்கும் போதும் பிறந்த குழந்தை முதல் பல குழந்தைகள் கடத்தப்படுவதை அறிந்து வருகிறோம். இது என்னை மனரீதியாக பெருமளவில் பாதித்தது இதனை மையமாக கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி ஒரு திரைப்படம் எடுக்க தீர்மானித்தேன். அதற்காக குழந்தை கடத்தலின் பின்னணி களத்தை ஆராய்ந்த போது, பல அதிரவைக்கும், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதனை முழுவதுமாக இத்திரைப்படத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். இப்படம் நடிகர் சிபிராஜுக்கு சிறப்பான ஒரு படமாக இருக்கும் அவரது திரைவாழ்வில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றார்.

2020 மார்ச் 13 வெளியாகவுள்ள வாலடர் திரைப்படத்தை
ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்கிறார். புதுமுக இயக்குநர் U.அன்பு இப்படத்தை இயக்கியுள்ளார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, சதுரங்கவேட்டை நாயகன் நட்டி மற்றும் சமுத்திரகனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Related posts

தனித்தனி வீட்டில் வாழும் கமல், ஸ்ருதி, அக்‌ஷரா

Jai Chandran

Thalapathy68 directed by Venkat Prabhu

Jai Chandran

Writer Teaser hits 1M+ views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend