கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
உடல் நலன் தேறுகிறார்
லண்டன். ஏப் :
பிரிட்டிஷ் பிரதமா் போரிஸ் ஜான்சன். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலையில் தேறியது.
இதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
போரிஸ் ஜான்சனுக்கு கொரோனோ தொற்று இருப்பது கடந்த 13 நாட்க ளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் உலக தலைவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. போரிஸ் ஜான்சனுக்கு 55 வயது ஆகிறது
#Boris Johnson moved from intensive care to general ward
#Corono Affects Bories Johonson
#போரிஸ் ஜான்சன் #பிரிட்டிஷ் பிரதமர்