கொரோனா பலி :
இத்தாலி 10, 799 – ஸ்பெயின் 7, 340
உலகை மிரட்டிக்கொண்டி ருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தாக கூறினாலும் சீனா உள்ளிட்ட எந்த நாடும் உண்மையான புள்ளி விவரங்களை வெளியிட்டது போல் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதிகாரப்பூர்வமாக கொரோனவை தடுக்க மருந்தும் கண்டுபிடிக்காத சூழல் தான் நிலவுகிறது.
கோரோனோவுக்கு உள்ளாகி சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்த வர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை யும், பலி எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கிறது.
ஸ்பெயின் நாடு என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக் கிறது. அங்கு பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இதுவொரு அபாய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.அங்கு பலி எண்ணிக்கை மொத்தமாக இதுவரை 7,340 ஆகி உள்ளது. இதைவிட அதிக இழப்பை சந்தித்துக் கொண்டி ருக்கிறது இத்தாலி. அங்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 779 ஆக உள்ளது. கொரோ னாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 97,689 ஆக உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 1,42,793 பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனr.பலி 2,490.
#Italy and Spain records highest death toll