தீவிர உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி துணிச்சலான சிகிச்சை பெற்று மீண்டவர் நடிகை மம்தா மோகன்தாஸ். ரஜினி நடித்த குசேலன், விஷால் நடித்த சிவப்பதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது மலையாள படங் களில் நடித்து வருகிறார். இவர் நல்ல பாடகியும் ஆவார்
விஜய் நடித்த வில்லு உள்ளிட்ட சில படங்களில் பாடல் பாடியுள் ளார். சமீபத் தில் இசை வீடியோவில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து சில தினங்களுக்கு முன் கேரளா திரும்பி னார்.
இநதியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் முதலில் தனக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி அறை யில் தங்கியிருப்பதுடன் முககவசமும் அணிந்திருக்கிறார். அரசு மற்றும் டாக்டர்கள் வேண்டுகோளை ஏற்று மம்தா செய்திருக்கும் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.
#Actress Mamtha Mohandas Self-ie Quarantined