கொரோனா வைரஸுக்கு கப சுர குடிநீர்..
மத்திய அரசு பரிந்துரை..
உலகை நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரேனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பாதிப்பிலிருந்து பிழைக் கின்றனர். ஆனால் இன்னும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற் காக தமிழக சித்த மருத்துவர் கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்திருக்கின் றனர்.
இதுதொடர்பாக ஆயுர் வேதம், சித்தா, யுனானி மருத்துவ துறை வல்லுநர் களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் ‘சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறி பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை தினசரி 2 முறை தலா 60 மில்லி பருகலாம்’ என சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். கொரோனா தொற்றுக்கு எதிராக கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என மத்திய அரசின் ஆயுஸ் துறை, நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர சூரணத்தை பரிந்துரை செய் துள்ளது.
நிலவேம்பு எப்படி டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாக அமைந்ததோ அதுபோல் கொரோன வைரஸ் தடுப் புக்கு கப சுர குடிநீர் மருந்தாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Drink Kaba Sura Water To Fight Against Corona