புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜ அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாடுமுழுவதும் முஸ்லிம்கள். கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா சட்டசபையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதன் முதலாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற அந்த தீர்மானம் வலியுறுத்தியது.
இதையடுத்து பஞ்சாப் சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்குஎதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அடுத்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
#Kerala, Punjab. Rajasthan Assembly passes resolution against CAA
#Telangana Assembly will pass resolution against CAA