கொரோனவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை..
புதுடெல்லி மார்ச் :
அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசியதாவது:
கொரோனாவை தடுப்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. மக்கள் நம்பிக் கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.
கடினமான ஊரடங்கு உத்தரவு காரண மாக மக்கள் சிரமத்திற்குள்ளாகி இருக் கின்றனர். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கி றேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட் டாலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேறுவழியில்லை. விதிகளை மீறி வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம். சட்டத்தை, உத்தரவுகளை மீறி வெளியே வரும் சிலரால் நாம் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றனர்.
தேசநலனை கருதி வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கான அடிப்படை தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்வோம். கொ னாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றதாக அமைந்திருக்கிறது
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
#Modi apologises for lockdown