படம்: உற்றான்
நடிப்பு:ரோஷன் உதயகுமார். ஹிரோஷினி கோமலி, வேல ராமமூர்த்தி, சுதாகர், கோதண்டம், மதுமிதா, பிரியங்கா, மதுசூதனன்
தயாரிப்பு: சாட் சினிமாஸ்
இசை என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு ஹாலிக் பிரபு
இயக்குனர் ராஜா கஜினி
கல்லூரி பேராசிரியையான தனது அக்கா பிரியங்கா வீட்டில் தங்கி கல்லூரி யில் படித்து வருகிறார் ரோஷன் உதயகுமார். மாணவர்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியான அது ஒரு கட்டத்தில் மாணவிகளும் இணைந்து படிக்கம் இருபாலருக்கான கல்லூரியாக மாறுகிறது. அந்த கல்லூரியில் படிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் மகள் ஹீரோஷினி. புதிதாக சேரும் மாணவி ஹீரோஷினிக்கும், ரோஷனுக்கும் காதல் ஏற்படுத்துகிறது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இன்ஸ்பெக்டர், ரோஷன் மீது பழி சுமத்தி சிறையில் அடைக்கிறார். அதை உண்மை என நம்பி ஹீரோஷினியும் காதலை முறிக்க எண்ணுகிறார். அப்போது அவரை சந்திக்கும் பிரியங்கா தனது தம்பி உதயகுமார் எவ்வளவு நல்ல மனம் கொண்டவன் என்பதை சொல்ல அதை ஏற்று மீண்டும் ரோஷனிடம் காதல் கொள்கிறார் ஹீரோஷினி. இந்த காதல் கைகூடுகிறாதா? இன்ஸ்பெக்டர் எடுத்த நடவடிக்கை என்ன? அதற்கு காதலர்கள் எடுக்கும் முடிவு என்ன என்பதற்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
விவசாயம், திகில், த்ரில்லர், சஸ்பென்ஸ், சைன்ஸ் பிக்ஸன், ஆணவக் கொலை, நில உரிமை என இன்றைக்கு கோலிவுட்டில் படங்களின் கதைக்களம் வெவ்வேறு திசையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் 90களின் கல்லூரி காதல் கதைக்கு உயிர்கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜாகஜினி. கூடுதலாக கல்லூரியில் நடக்கும் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசி இன்றைய காலத்தின் கல்லூரி தேர்தல் அட்டகாசத் தையும் சேர்த்திருக்கிறார்.
கல்லூரி மாணவராக வரும் ரோஷன் உதயகுமார் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார். காதல் துள்ளளிடும் வயதுக் காரர் ரோஷன், நாயகி ஹீரோஷினியுடன் காதல் விளையாட்டுகளில் ததும்புகிறது. எப்படி இந்த காதலுக்கு ஒரு எதிரி, ஒரு சமாதான தூதுவர், காதலர்களுக்குள் மோதல் என்ற வழக்கமான பார்முளாவும் கதையை நீண்ட தூரத்துக்கு நகர்த்தி செல்கிறது.
காதலன் ரோஷன் ஹீரோஷினியை தாக்கியாக அவரை கைது செய்யும் போலீஸ் தந்திரம், ஜாமினில் வெளியில் வரும் ரோஷனை மீண்டும் ஹீரோஷினியுடன் சேர்த்துவைக்க காதல் தூதராகும் பிரியங்கா எல்லாமே இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே யூகிக்கக்கூடிய வகையில் கடந்து செல்கிறது.
ஹீரோவை போலவே ஹீரோயின் ஹீரோஷினியும் நல்ல அழகு. கல்லூரி மாணவிக்கான முகவெட்டுடன் வேடத்தை நிறைவு செய்திருக்கிறார். வெயில் படத்தில் நடித்த பிரியங்கா நீண்ட நாட்களுக்கு பிறகு தென்படுகிறார். கல்லூரி பேராசிரியையாக பக்காவாக பூசிமெழுகினார்போல் பளபளக் கிறார். நடையும், பேச்சும், நிதானமும் வேடத்துக்கு பொருந்திப் போகிறது. அரசியல்வாதியாக வரும் வேல ராமமூர்த்தி, ஹீரோ ரோஷன் மீது கோபம் கொண்டு அவரை மிரட்டுவது விறுவிறு. இன்ஸ்பெக்டர் மதுசூதனன்ராவ், காதல் சுகுமாரன் கொடுத்த ்வேலையை செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். கலகலவென படத்தின் முதல் பாதி ேவகமாக நகர 2ம்பாதியில் சென்டி மென்ட் டச்சை தடவி மனதை தொட முயன்றிருக்கிறார் இயக்குனர். குறிப் பாக கிளைமாக்ஸ் காட்சியில் மனதை கவர மெனக்கெட்டிருக்கிறார்கள்.
உற்றான்- காதலின் கீதம்.