உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்..
நடிகை நீது சந்திரா அழைப்பு..
தமிழில் பல படங்களில் நடித்திருப்பதுடன் இந்தி, போஜ்புரி போன்ற மொழிப்படங்களில் நடித்திருப் பவர் நீது சந்திரா. ஊரடங்கில் நடிகர், மாடல் களுக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்தி ருக்கிறார். இதுபற்றி டிவிட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ஊரடங்கு நாளில் நிரந்தர வருமானம் இல்லாத வர்களின் வாழ்க்கை மிகவும் கடினத்தில் உள்ளது. சினிமா துறையில் இருக்கும் நண்பர்கள், மாடல்கள், நடிகர்கள் என யாருக்கேனும் உதவி தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நானும் இன்னும் சிலரும் சேர்ந்து உதவ தயாராக இருக்கிறோம். இதற்காக யாரும் தயங்க வேண்டாம். எனக்கு தகவல் தெரிவித்தால் போதும்’ என தெரிவித்திருக்கிறார்..
#Neetu Chandra ready to help the needy in the film industry
#aathibagavan #yaavarumnalam #theerathavilaiyaattupillai