அருண்ராஜா காமராஜின் ’கன்னக்குழி அழகே’ சிங்கிள் வெளியீடு..
சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனாபடத்தை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ் . பாடலசிரியரான இவர் ரஜினியின் ‘கபாலி’ படத்தில் ’நெருப்புடா..’ பாடல் எழுதி பிரபலமானார். திரையுலகிலும் இசைத் துறையிலும் வளர்ந்து வரும் அருண்ராஜா காமராஜ் ஏ.ஆர்.கே. என்ற பெயரில் சொந்த நிறுவனத்தைத் துவங்கி, பிலீவ் ஆர்டிஸ்ட் சர்வீசஸ் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இசை ஆல்பங்களையும் தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிடும் திட்டத்துடன் புதியதொரு பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். ‘கன்னக் குழியழகே’ என்ற தனிப்பாடல், இந்த நிறுவனம் சார்பாக முதல் முறையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
கணேசன் சேகர் நாட்டுப்புற மெல்லிசையில் பாடலாக உருவாக்கப்பட்டிருக் கும் இதன் டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த்துள் ளது. விஜய் ஜேசுதாஸின் குரலில், தற்போது வெளியாகியிருக்கும் ‘கன்னக் குழியழகே’ பாடல் வீடியோ, இளைஞர்களை ஈர்த்திருக்கிறது.
இதுபற்றி அருண்ராஜா காமராஜ் கூறியதாவது: இசைத் துறையில் திறமையானவர்களைக் கொண்டு தனி இசைப்பாடல்களை உருவாக்குவதையே பிரதான நோக்க மாகக் கொண்ட ஏ.ஆர்.கே.நிறுவனத்தின் முதல் முயற்சியாக கணேசன் சேகர் இசைய மைப்பில் ‘கன்னக் குழியழகே’ பாடல் வெளி யாகியிருக்கிறது. முதல் பார்வையிலேயே ஒரு பெண்மீது காதல் வசப்படுவது குறித்து பாடல் ஒன்றை ஆர்வம் மிக்க பாடலா சிரியர் ஒருவர் எழுதவேண்டியிருக்கிறது. ஆனால் அவருக்கோ இதில் அனுபவமில்லை என்பதால் அந்தச் சூழலே முற்றிலும் முரண் பாடாக இருக்கிறது. அந்த சமயத்தில் அடுத்த பாடல் பதிவுக்காக பெண் ஒருத்தி வருகிறாள். கவர்ந்திழுக்கும் அவளது எழிலான தோற்றமும், தேவதை போல் அவள் புன்ன கைப்பதும் வற்றாத வார்த்தை ஊற்றாகப் பெருக்கெடுக்க, அழகான பாடல் பிறக்கிறது. பாடலின் மந்திர வரிகளைக் கேட்ட அந்தப் பெண், இறுதியில் புன்னகைத்தவாறே பாடலாசிரிய.ருக்கு வாழ்த்து தெரிவிக்கிறாள். எழுச்சியூட்டும் ஆன்மாக்களின் புதிய பயணம் இங்கே தொடங்குகிறது. அது தொடரவும் போகிறது.
இவ்வாறு அருண்ராஜா காமராஜ் கூறினார்.
பாடலை உருவாக்கியிருப்பதுடன் பாடலுக் கான விஷுவல்ஸையும் அருண்ராஜா காம ராஜ் இயக்கியிருக்கிறார். லிரிக் வீடியோ பொறுப்பை ரஞ்சித் குமார் ராஜேந்திரன் கவனிக்க, ஓவியப் பொறுப்புகளை திவ்யா ஏற்றிருக்கிறார். பப்ளிசிட்டி டிசைன் பொறுப்புகளை நெக்ஸ் ஜென் நிறுவனம் ஏற்க, மோஷன் போஸ்டர் பணிகளை பாஷித் சையத் கவனித்திருக்கிறார். இந்த பிரதான கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘கன்னக் குழி அழகே’ என்ற இதயத்தைத் தொடும் இந்த இனிய மெல்லிசைப் பாடலை உருவாக்கி யிருக்கிறார்கள்.
#அருண்ராஜா காமராஜ் #கன்னக்குழி அழகே
#Arunraja Kamaraj’s ARK Entertainment first independent single
#Kannakuzhi Azhagey