பெப்சி தலைவர் செல்வமணி பேட்டி
சென்னை மார்ச்.
பெப்சி (தென்னிந்திய திரைப்பட சம்மேளனm) தலைவர் ஆர். கே .செல்வமணி இன்று பேட்டி அளித்தார். அப்போது ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவாவது :
கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளில் அதிகாரித் துள்ளது. பாதுகாப்பு நிறைந்த நாடுகளிலேயே கொரோனோ வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் அவ்வளவு பாது காப்பு வசதிகள் கிடையாது. கொரோனோ இந்தியாவிலும் நுழைந்துவிட்டது இந்நிலையில் இந்த தாக்கு தலை சமாளிக்க தேவையான தடுப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டி உள்ளது.
சினிமா ஷுட்டிங்கின் போதுபோதுமான சுகாதார வசதிகள் கிடையாது. சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி வரும் 19ம் தேதி முதல் சினிமா, டிவி, விளம்பர படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன.இதற்கு தயாரிப்பா ளர்களும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறி தெரிவித்துள்ளார்.
#Coronavairus Scare: No film shooting, TV Shooting from March 19th
#FEFSI RK.Selvamani