படம்; அசுரகுரு
நடிப்பு: விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு,
தயாரிப்பு: ஜேஎஸ்பி சதிஷ்
இசை: கணேஷ் ராகவேந்திரா.
பின்னணி இசை:சைமன் கே கிங்
ஒளிப்பதிவு: ராமலிங்கம்
இயக்கம்: ஏ.ராஜ்தீப்
எங்கெல்லாம் லட்சங்கள் கோடிகளில் பணம் தென்படுகிறதோ அங்கெல்லாம் காற்றுபோல் நுழைந்து கொள்ளையடிக்கிறார் விக்ரம் பிரபு. ஓடும் ரயிலில் வரும் பல கோடி ரூபாயை ரெயிலின் மேற்கூரையில் ஓட்டைபோட்டு இறங்கி கொள் ளையடித்துவிட்டு தப்பிக்கிறார். போலீசில் புகார் ஆகும் இந்த கொள்ளை பற்றி துப்பறிய விசாரணை தொடங்குகிறது. இதற்கிடையில் ரவுடி நாகி நீடுவின் மகனிடமிருந்தும் விக்ரம் பிரபு கொள்ளையடிக் கிறார். அந்த கொள்ளையனை கண்டுபிடிக்க நாகிநீடு தனியார் டிடெக்டிவிடம் பொறுப்பை ஒப்டைக்கிறார். கொள்ளை யனை கண்டுபிடிக்க மகிமா களம் இறங்குகிறார். ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் மகிமா என இரண்டு தேடுதல் வேட்டையிலும் சிக்காமல் டிமிக்கி கொடுக்கிறார் விக்ரம்பிரபு. ஒரு கட்டத்தில் மகிமாவிடம் வசமாக சிக்குகிறார். அவரை தாக்கி மயக்கம் அடையச் செய்கிறார் மகிமா. பணம் இருக்கும் இடத்தை நாகிநீடுவிடும் சொல்ல அவர் அடியாட்களுடன் வந்து தனது பணத்துடன் சேர்த்து அங்கிருக்கும் எல்லா பணத்தையும் கொள்ளையடித்து செல்கிறார். இந்த தகவல் போலீசுக்கு கிடைக்க நாகீ நிடுவை வழிமறிக்கும் போலீஸ் அந்த பணத்தை தன்வசப் படுத்துகிறது. ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபு போலீசிடம் சிக்கு கிறார். பேராசை கொண்ட அந்த போலீஸ் அதிகாரி காற்றாயில் மறைத்துவைக்கப்பட்டி ருக்கும் பல கோடி பணத்தை எடுத்து வந்தால் உன்னை விடுதலை செய்கிறேன் என்று விக்ரம்பிரபுவிடம் சொல்கிறார். அதற்கு ஒப்புக்கொள்ளும் விக்ரம் பிரபு பணத்தை கொள்ளையடித்து வருகிறார். ஆனாலும் அவரை சுட்டுத்தள்ள முயல்கிறார் போலீஸ் அதிகாரி. அடுத்து நடப்பது என்ன என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது.
மின்னல் வேகத்தில் செல்லும் ரெயிலின் கூரை மீது குதித்து விக்ரம் பிரபு கூரைைய வெல்டிங் செய்து கொள்ளை யடிக்கும் முதல்காட்சி பரபரப் புடன் தொடங்குகிறது. அடுத்து ஓடும் கார் டிக்கியில் சிறிய வெடி வைத்து அதை வெடிக்கச் செய்து அதிலிருக்கும் பணத்தை அபேஸ் செய்து செல்வதுமாக அடுத்தடுத்து விறுவிறுப்பு வேகத்தை கூட்டுகிறது. வங்கி யின் பின்புறம் ஓட்டைபோட்டு லாக்கரில் வைத்திருக்கும் பணத்தை் கொள்ளையடித்து விட்டு தப்பிப்பதும் விர்ர்ர் ரகம்.
விக்ரம் பிரபு கொள்ளையடிக்கும் கோடிக்கணக்கான பணத்தை ஒரு அறையில் பதுக்கி வைக்கி றார். அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்பதும், அவர் கொள்ளையடிப் பதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்டிருக்கும் ஒருவித நோய்தான் காரணம் என்று சொல்வதில் வலு இல்லை. விக்ரமின் தாய்பற்றிய சென்டி மென்ட் வைத்திருந்தால் ஒர்கவுட் ஆகியிருக்கும். கோலிவுட்டில் சென்டிமெடுக்கு ரொமவே பவர் அதிகம்.
தம்மடித்துக்கொண்டு ஸ்டைலாக மார்டன் உடையில் வரும் மகிமா இவர்தான் அந்த சாட்டை படத்தில் நடித்தவரா என்று கேள்வி எழ வைக்கிறார். நடிப்பிலும், தோற்றத்திலும் செம மாற்றம். விக்ரம்பிரபுவை பின்தொடரும் மகிமா ஒரு கட்டத்தில் இரும்பு தடியால் விக்ரம்பிரபுவை தாக்கும்போது திகில் ஏற்படுத்துகிறார். கதையில் நிறைய திருப்பங்கள் இருந்தாலும் யூகிக்கும் ரகமாக இருக்கிறது.
டீ கடைக்காரராக வரும் யோகி பாபுவின் கலாட்டா பஞ்ச் பேசி கலகலப்பூட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் அடிதின்றும் தனது நக்கல் பேச்சை விட்டுவிடாமல் காமெடி பஞ்ச் களை அள்ளிவீசுவது அரங்கை அதிர வைக்கிறது.
ஜேஎஸ்பி சதீஷ் தயாரித்திருக் கிறார். ஏ.ராஜ்தீப் கிரைம் த்ரில் கதையை குழப்பமில்லாமல் தெளிவாக இயக்கியிருக்கிறார். ஆங்காங்கே கொஞ்சம் குட்டையை குழப்பியிருந்தால் குழம்பிய குட்டையில் கொஞ்சம் மீன் பிடித்திருக்கலாம். ராமலிங்கம் ஒளிப்பதிவு பளிச். காட்சிகளை ஓவர் டேக் செய்யமாமல் காட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிப்பது பிளஸ்.
அசுரகுரு- வித்தைக்காரன்.