Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன்லால் போல் நடித்துள்ள விவேக் ஓபராய்

எம் எக்ஸ்  ஒரிஜினல் இணையத் தொடரான ‘தாராவி பேங்க்’ வலுவான கதைக்களத்தோடு தாராவி பகுதியில் நடைபெறும் ஒரு பரபரப்பான குற்றச் செயல் களை உள்ளடக்கிய கதை ஆகும். இது போன்ற ஒரு பரபரப்பான கதைக்களத்தோடு பார்வையா ளர்ன்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த இணையத் தொடரில் 10 எபிசோட்கள் இருக் கிறது. தாராவியின் பகுதிகளில் 30,000 கோடி ரூபாயை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான நிதி சாம்ராஜ்யத்தை வழி நடத்தக் கூடிய பிடிக்க முடியாத ஒரு தலைவனை துரத்தும் அமைதி யற்ற காவல்துறை அதிகாரியை பார்வையாளர்கள் இதில் பார்க்கப் போகிறார்கள்.

இந்தத் தொடரில் ஜெ சி பி ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத் திற்காக விவேக் ஆனந்த் ஓபராய் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்த காவல்துறை அதிகாரி ரூல் புக்கில் உள்ளபடி நடந்து கொள்ளாதவன். உண்மை யைச் சொல்ல வேண்டும் என்றால், விதிகளை தனக்கேற்றபடி மாற்றிக் கொள்பவன்தான் இந்த ஜெயந்த் கவாஸ்கர். அதேபோல, தன்னு டைய உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் ஆதரவை அவன் விரும்புவ தில்லை, அவனுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய் வான்.

இப்போது, விவேக் ஓபராய் ‘தாராவி பேங்க்’ இணையத் தொடருக்கும் தன்னுடைய அறிமுகப் படமான ‘கம்பெனி’க்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி நினைவு கூர்ந்துள்ளார். அதில் மும்பை காவல்துறையின் இணை ஆணையரான வீரப்பள்ளி சீனிவாசன் ஐபிஎஸ் என்ற நடிகர் மோகன்லாலின் கதாபாத்திரத்தில் இருந்து ‘தாராவி வங்கி’யில் தனது கதாபாத்திரத்திற்கான உத்வேகம் பெறப் படத்தை மீண்டும் பார்வை யிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து விவேக் பகிர்ந்திருப்பதாவது, “சிலருடைய நடிப்பு மட்டும்தான் உங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க பதிந்தி ருக்கும். ‘கம்பெனி’ என்னுடைய முதல் படமாக இருந்தாலும் அதுதான் நான் பல விஷயங் களைக் கற்றுக் கொண்ட களம். அஜய் தேவகனில் இருந்து மோகன்லால் வரையும் பல சிறந்த நடிகர்களுடன் வேலைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண் டேன். உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் ‘தாராவி பேங்க்’ இணையத் தொடரில் நடிப்பதற்காக வீரபள்ளி ஸ்ரீனிவாசன், ஐபிஎஸ் மும்பையின் இணை கமிஷனராக மோகன்லால் சார் நடித்தக் காட்சிகளை நான் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அதில் எப்படி அணுகினார் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது”.

மோகன்லாலின் நடிப்புக் குறித்து பாராட்டி அவர் மேலும் கூறியிருப்ப தாவது, “மோகன்லால் சாருடைய அந்த நடிப்பு அவருடைய தேர்ந்த அனுபவத்தில் இருந்து வந்ததால் எந்தவொரு சிரமமும் இல்லாமல் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் அந்த கதாபாத்திரத்தை அணுகிய விதம், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது, படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் என எல்லா விஷயங்களுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அவருடைய சில நுட்பங்களை நானும் இதில் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். ஏனெனில், மும்பை போலீஸ் ஃபோர்சில் உள்ள பலரும் எனக்குத் தெரியும் மேலும் அவர்களுடைய வழிகாட்டுதலும் எனக்கு உதவின யாக இருந்தது”.

ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத் திரத்தில் உள்ள உண்மையான சவால்களையும் அவர் பகிர்ந்து கொண்டார், “உண்மையில் இதில் கடினமான ஒரு விஷயம் என்ன வென்றால், சரியான விதத்தில் நம்பும்படியாக என் நடிப்பை வெளிப்படுத்துவது மற்றும் அது உயிரோட்டமாக திரையில் கொண்டு வருவது போன்ற விஷயங்கள்தான். மோகன்லால் சார் போல அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்”.

Related posts

ஆதார் கேட்டு அலையும் ஒரு கிராமத்தின் உண்மை கதை அட்ரஸ்: இயக்குனர் இராஜமோகன்

Jai Chandran

CSKSingangala from @SilambarasanTR_’s CoronaKumar

Jai Chandran

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend