Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

யூத் (பட விமர்சனம்)

படம்: யூத்

நடிப்பு: கென் கருணாஸ், அனிஷ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், தேவதர்ஷினி, நளினி சுராஜ் வெஞ்சாரமூடு

தயாரிப்பு: கருப்பையா சி ராம் சுலோச்சனா குமார்

இசை: ஜிவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: விக்கி

இயக்கம்: கென் கருணாஸ் அண்ட் கேங்

பிஆர்ஓ : பரணி அழகிரி

பெற்றோருக்கு ஒரே பிள்ளையான பிரவீன் பள்ளியில் சுமாரான மாணவராக இருப்பதுடன் நண்பர்களுடன் கொட்டமடிப்பது, காதலியை தேடி அலைவது என்று விளையாட்டுப் பிள்ளையாக சுற்றித் திரிகிறார். பள்ளியில் படிக்கும் சக மாணவியை காதலிக்கிறார். மற்றொரு மாணவியும் பிரவீனை காதலிக்கிறார். மூன்றாவதாக இன்னொரு காதல் வருகிறது. இந்த காதல்களிலெல்லாம் ஏமாற்றப்படும் பிரவீன் எடுத்த முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

படத்திற்கு யூத் என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு மெச்சூர்டான படத்தை கென் இயக்கி தர முடியும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தரமான ஒரு படத்தை தனது முதல் படமாக கென் இயக்கியிருப்பதுடன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

சக நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி, காதல் சிலுமிஷம், தந்தையின் பேச்சை கேட்காத பிள்ளை என கென் தனது கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும் அதை பக்கவாக நடித்து பூர்த்தி செய்திருப்பதும் அவரை ஒரு நல்ல நடிகராக கண் முன் நிறுத்துகிறது. நடன காட்சி, சண்டைக்காட்சியிலும் தேர்ச்சி பெற்றிருப்பது பிளஸ்.

கென் காதலிகளாக அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் நடித்திருக்கின்றனர்.
மீனாட்சி, பிரியன்ஷி கிளாமர் நாயகிகளாக வருகின்றனர். அனிஷ்மா கென்னை நல்வழிக்கு திருப்பும் நாயகியாக பொறுப்பான இடத்தில் பொருத்தமான நடிப்பை தந்திருக்கிறார். இந்த கேங்கில் அந்த குண்டு பெண்ணும், அவரது தோழியும் காதலை பிரிக்கும் வில்லித்தனத்தை காமெடி தெறிக்க செய்திருக்கின்றனர்.

கென் தந்தையாக சுராஜ் வெஞ்சாரமூடு, தாயாக தேவதர்ஷினி எதார்த்தமான பெற்றோர்களாக நடித்து கண் கலங்க வைக்கின்றனர். கண்டிப்பான பிரின்ஸ்பாலா
க ஒரு புதிய கதாபாத்திரத்தில் நளினி கவனத்தை கவர்கிறார்.

நல்லதொரு படத்தை கருப்பையா சி ராம் நம்பிக்கையுடன் தயாரித்திருப்பது வீண் போகாது.

இந்த படத்திற்கு சம்பளமே வாங்காமல் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பாடல்களை இனிமையுடன் தரத்துடன் தந்திருப்பது அவரது நேர்மை.

ஒளிப்பதிவாளர் விக்கி இளவட்ட படங்கள் என்பதற்காக கவர்ச்சியை அள்ளிக் கொட்டாமல் கவனமுடன் காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும் படமாக பதிவு செய்திருப்பது வெரி குட் சொல்ல வைக்கிறது.

கென் கருணாஸ் அண்ட் கேங், நாங்க பொறுப்பான கேங் என்று பெயரெடுக்கும் அளவுக்கு காதல், செண்டிமெண்ட், பெற்றோர் பாசம் என ஒரு சராசரி குடும்பத்தின் பிரதிபலிப்பை மனதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லி வெற்றி கனியை பறித்திருக்கின்றனர்.

 

யூத் – பெற்றோர்கள் பிள்ளைகளுடனும், பிள்ளைகள் பெற்றோர்களுடனும் பார்க்க வேண்டிய படம்.

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com

Related posts

Anbulla Ghilli Trailer On July 3rd..

Jai Chandran

’பூமி படத்தில் ஜெயம் ரவி போலவே என் பாத்திரமும் கவனத்தை ஈர்க்கும்’ நிதி அகர்வால்

Jai Chandran

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend