Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வீட்ல விசேஷம் குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வரும்- சத்யராஜ்

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த
நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் நடிப்பில், ஜூன் 17, 2022 அன்று வரவிருக்கும் திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ வெளியீட்டில் அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

படம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது:
இந்த ரீமேக் உருவாகும் முன்பே, பதாய் ஹோ திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், அதன் உள்ளடக்கம் மற்றும் அவர்கள் அதை வழங்கிய விதம் ஆகியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆனால், ரீமேக்குக்காக ஆர்.ஜே.  பாலாஜி என்னை அணுகிய போது, அந்த கதாபாத்திரத்தை முழுமையாக என்னால் வெளிப்படுத்த முடியுமா என்று என் மனம் சற்று தயக்கம் கொண்டது. ஏனென்றால், பார்வையா ளர்கள் என்னை மென்மையான, முரட்டுத்தனமான மற்றும் கடினமான பாத்திரங்களில் பார்த்திருக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் அத்தகைய கதாபாத்திரத்தில் இல்லை. ‘பாவம் மூஞ்சி’ சத்யராஜை (அப்பாவி ) கொண்டு வர வேண்டும் என்று பாலாஜி என்னிடம் சொன்னார். கவுண்டமணி சாருடன் நான் நடித்த சில வேடிக்கையான காட்சிகளை அவர் குறிப்பிட்டார், அதில் எனது கதாபாத்திரம் ஒரு அப்பாவி குழந்தை யாக நடந்து கொள்ளும். அதேசமயம், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படத்தில் வரும் என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பை கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு இயக்குனருக்கு இவ்வளவு சரியான தெளிவு இருந்தால், அது நடிகர்களுக்கு எளிதான காரியமாகி விடும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த பாத்திரத்தில் நடிக்க இது எனக்கு மிகவும் உதவியது. மேலும், ஊர்வசி மேடம் ஒரு சிறந்த கலைஞர், மேலும் அவரது நடிப்பு திரையரங்குகளில் பெரிய பாராட்டுகளை பெறும்.

தமிழ் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ​​“இந்தியா முழுவதும் கலாச்சார மற்றும் உறவுமுறை மதிப்புகளில் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. குடும்ப அமைப்பு முற்றிலும் ஒரே மாதிரியானது, அதை சித்தரிப்பதில் பெரிய வித்தியாசத்தை நான் உணர வில்லை. ஆம், நிச்சயமாக, RJ பாலாஜி மற்றும் அவரது குழுவினர் சில அம்சங்களை சேர்த்துள்ளனர், இது ஒரிஜினல் பதிப்பை விட பார்வையா ளர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என தயாரிப்பாளர்களால் பாராட்டப்பட்டுள்ளது. வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாகா பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.”

வீட்ல விசேஷம் படத்தை ஆர்.ஜே.பாலாஜி-என்.ஜே சரவணன் இயக்கியுள்ளனர்,  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புராஜக்ட்ஸ்  லிமிடெட் எல் எல் பி  சார்பில் போனி கபூர், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்கான இப்படத்தில் RJ .பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, வி எம் சி லலிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வீட்ல விசேஷம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related posts

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் !

CCCinema

Velan team kick-starts dubbing works

Jai Chandran

கருமேகங்கள் கலைகின்றன”பட முதல் பார்வை கமல் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend