Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துபாயில் ஆங்கிலத்தில் வெளியாகும் கள்ளிக்காட்டு இதிகாசம்

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழி பெயர்த்து வருகிறது. இந்தி – உருது -மலையாளம் – கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்திருக்கிறது; கீதா சுப்ரமணியம் மொழி பெயர்த்திருக்கிறார்.

துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் வெளியிடப் படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள் கிறார்கள்.

மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுக ளைச் செய்துள்ளார்கள்.

Related posts

டேவிட் சாசூன் நூலக கோபுரத்தில் ‘கியாரா கியாரா’ ஸ்னீக் பீக்

Jai Chandran

PeiMama from September 24th

Jai Chandran

Actress Manjima got her first jab done

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend