Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“வா வரலாம் வா” ரிலீஸ் தேதி

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் “வா வரலாம் வா”. தயாரிப் பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாய கனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கருமேகங் கள் கலைகின்றன படத்தில் நடித்த மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். வில்லனாக “மைம்” கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் நடிகை சிங்கம்புலி, சரவண சுப்பையா,தீபா, வையா புரி, வாசு விக்ரம், பயில் வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட மேலும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய மாக இந்த படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல், சண்டை பயிற்சியாளராக இடிமின்னல் இளங்கோ என பிரபலமானவர்களே பணியாற்றி உள்ளனர்.

ஏற்கனவே ‘வா வரலாம் வா’ படத்தின் First Look வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

அதன்படி “வா வரலாம் வா” திரைப்படத்தின் வெளி யீட்டு தேதியை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி,எஸ் கிரியேட்டிவ் மீடியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் தேதி “வா வரலாம் வா” திரைப்படம் திரையரங் குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பாடல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

– வெங்கட் பி.ஆர்.ஓ

Related posts

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி!

Jai Chandran

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் (பட விமர்சனம்)

Jai Chandran

அகமும் புறமும் இசை அமைப்பாளர் தரன்குமாருடன் நேர்காணல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend