Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தி ராக்கெட்ரி நம்பி எபெஃக்ட் (பட விமர்சனம்)

படம்: தி ராக்கெட்ரி நம்பி எபெஃக்ட்

நடிப்பு: ஆர். மாதவன், சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, சாம் மோகன், குல்ஷன் குரோவர், மிஷா கோஷல் இவர்களுடன்  சூர்யா

தயாரிப்பு:  ட்ரை கலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன், சரிதா மாதவன், மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன்

ஒளிப்பதிவு: சீர்ஷா ராய்

இசை: சாம் சி.எஸ்

பி ஆர்.ஓ:  சுரேஷ்சந்திரா, ரேகா

ராக்கெட் விஞ்ஞானி  மாதவனை  ( நம்பி நாராயணனை) டிவிக்காக நேர்காணல் செய்கிறார் சூர்யா. இஸ்ரோவில் எப்படி சேர்ந்தீர்கள்? தேச துரோக குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொண்டீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கிறார் மாதவன்.

நம்பி நாராயணன் 1966 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்  சேர்ந்து பின்னர்  அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ராக்கெட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் படிக்கிறார். அவரை  நாசா வேலைக்கு அழைக்க அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். இஸ்ரோவில் வேலை சேர்கிறார் நம்பி நாராயணன்.  திட எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திரவ எரிபொருள்  கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று விகாஸ் என்ஜினையும் இந்தியாவுக் காக கண்டுபிடிக்கிறார். முதல் முறையாக இந்தியாவில் தனது குழுவுடன் இணைந்து ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிடு கிறார்.  உள்நாட்டில் ராக்கெட் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் கிரையோஜெனிக் என்ஜின் களை இந்தியா கொண்டுவர விரும்புகிறார். அதற்கு அமெரிக்கா இடையூறு செய் கிறது.  ஆனாலும், ரஷ்யாவுடன் சுமூகமாக பேசி  கிரையோ ஜெனிக் என்ஜின்களை  வாங்குகிறார்  அத்துடன் பாகிஸ்தான் வழியாக வரும்போது  பிரச்சனை ஏற்படுகிறது.  இந்திய ராக்கெட் தொழில் நுட்பத்தை பாகிஸ் தானுக்கு அனுப்பியதாக கூறி மாதவன்  தேச துரோக வழக்கில் கைது செய்யப் படுகிறார்.  இந்த பொய் வழக்குகளில் இருந்து அவர் எப்படி மீண்டார்? அதன் பின் நடந்தது என்ன?  என்பதற்க்கு படம் பதில் சொல்கிறது.

லவர் பாயாக அலைபாயுதே படத்தில் அறிமுகமான மாதவன் தன் நடிப்பையும், உழைபையும் எப்படி பன்மடங்கு பெருக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை நம்பி நாராயணன் வேடம் ஏற்று நடிப்பதில் தொடங்கி படத்தை கோர்வை யாக இயக்கியிருப்பதுவரை நிரூபித்திருக்கிறார்.

முற்றிலுமாக தனது அசல் தோறத்திலிருந்து மாறி முழுமையாக நம்பி நாராயண னாக மாறுவதற்கு எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பார் என்பதை எண்ணும்போது கமல்ஹாசனின் உழைப்புக்கு ஈடாக மாதவன் உழைப்பையும் பாராட்டலாம்.

விஞ்ஞானி நம்பியை தேச துரோகியாக மாற்றி சிறையில் அடைத்த கொடுமைகளையும், அப்போது என்ன  மன நெருக் கடிக்கு அவரும் குடும்பத்தாரும் ஆளானார்கள் என்பதை உணர்ச்சி பெருக்குடன் சொல்லியிருப்பதும்,   24 வருடங்கள் வழக்கு நடத்தி  நிரபராதியாக வெளிவருவது மனதை நெகிழ வைக்கிறது.

தேச துரோக குற்றம் சாட்டப்பட்ட வரை பின்னர் 2019ம் ஆண்டில்  ‘பத்ம பூஷண்” விருது வழங்கி கவுரவிக்கும் காட்சிகள் உணர்ச்சிகரமானது.

நம்பியின் உண்மை  கதையை கேட்டு அவர் மீது மிகுந்த மரியாதை காட்டும் விதமாக சூர்யா அவர் காலில் விழுந்து வணங்குவது புல்லரிப்பு.

சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக் குமார், கலாம் கேரக்டரில் குல்ஷன் குரோவர், நம்பியின் மனைவி மீனாவாக சிம்ரன்  என அனைவரும் பொறுப்புடன் நடித்துள்ளனர்.

சீர்ஷா ராய்  ஒளிப்பதிவு
சாம் சி.எஸ் இசை நிறைவு.

உண்மை கதையை உள்ளடக்கம் மாறாமல்  இயக்கியிருக்கும் மாதவனை கைகுலுக்கு பாராட்டலாம்.

தி ராக்கெட்ரி நம்பி எபெஃக்ட் –  ஒரு விஞ்ஞானியின் வரலாறு

Related posts

*லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில் “விடியும் வரை காத்திரு”

Jai Chandran

Yash- Namit Malhotra Produce Global Epic Ramayana

Jai Chandran

‘கிறிஸ்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend