படம்: தி பெட்
நடிப்பு: ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா
தயாரிப்பு: வி விஜயகுமார்
இசை: தாஜ் நூர்
ஒளிப்பதிவு: கே. கோகுல்
இயக்குனர்: எஸ் மணிபாரதி
பி ஆர் ஓ: ஏ. ஜான்
வேலு (ஸ்ரீகாந்த்) மற்றும் மூன்று நண்பர்கள் ஊட்டிக்கு ஜாலி செய்ய கால்கேர்ள் கிறிஸ்டியை (சிருஷ்டி டாங்கே) காசு கொடுத்து அழைத்துச் செல்கின்றனர். அங்கு ஒரு காட்டேஜில் அறை எடுத்து தங்கும் அவர்கள் ஜாலி செய்வதற்கு பதில் குடித்துவிட்டு போதையில் நாட்களை வீணடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் கிறிஸ்டி காணாமல் போகிறார் அதேபோல் நான்கு நண்பர்களில் ஒரு நண்பரும் காணாமல் செல்கிறார். காணாமல் போனவர்களை வேலு மற்றும் நண்பர்கள் தேடி அலைகின்றனர். இதற்கிடையில் காணாமல் போன நண்பர் பிணமாக போலீசால் மீட்கப்படுகிறார். காணாமல் போன சிருஷ்டி கதி என்னவானது? நண்பனை கொன்றவர் யார்? என்ற சஸ்பென்சுக்கு தி பெட் பதில் அளிக்கிறது.
கால்கேர்ள் கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே மாறுபட்ட ஒரு நடிப்பை தந்திருக்கிறார். இளமை துள்ளலுடன் ஜிவ்வென கவர்ச்சி உடையில் காட்சிக்கு காட்சி சிருஷ்டி டாங்கே தனது கதாபாத்திரத்தை கிக் ஏற்றும் வகையில் செய்திருப்பதும் எந்த தயக்கமும் காட்டாமல் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நான்கு நண்பர்களுடன் அவர் டபுள் மீனிங்கில் பேசி படுக்கை சல்லாபத்துக்கு தயாராக இருப்பது போல் காட்டுவதெல்லாம் அசல் கால்கேர்ள் ஆக மாறி கதாபாத்திரத்தோடு ஒன்றயிருக்கிறார். . .
சிருஷ்டி டாங்கேவின் அழகில் மயங்கும் ஸ்ரீகாந்த் அவரை ஒருதலையாய் காதலிக்க தொடங்கும்போதே இவர் சக நண்பர்களை கண்டிப்பாக சிருஷ்டியை தொடவிட மாட்டார் என்பதை உணர முடிகிறது. ஶ்ரீகாந்தின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் திடீரென மாறப்போகிறது என்பதை கணிக்க முடியவில்லை..
தொப்பை வயிறை வைத்துக்கொண்டு பிளாக் பாண்டி சிருஷ்டிடாங்கேவிடம் செய்யும் குறும்புத்தனங்களில் கிளுகிளுப்பு அதிகம். அவருக்கு சிருஷ்டி கொஞ்சம் ஓவராகவே இடம் கொடுக்க, மனுஷன் கையையும் காலையும் அமுக்கிப் பிடித்து அனுபவித்திருக்கிறார்.
ஜான் விஜய் உதார்விடும் போலீசாக வந்து தனது வழக்கமான நக்கல் பேச்சில் தெனாவட்டு காட்டுகிறார். மேலும் பப்பு, தேவி பிரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தை வி விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.
தாஜ் நூர் இசை இரண்டாம் பாதியில் வேகம் காட்டுகிறது.
கே. கோகுல் ஒளிப்பதிவு ஓகே என்றாலும் ஊட்டியின் அழகை இன்னும் கூட கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு பதிவு செய்திருந்தால் கூடுதல் பிளஸாக இருந்திருக்கும்.
இயக்குனர் எஸ் மணிபாரதி
ஒரு பெட்டின் (படுக்கை) பார்வையில் கதையை சொல்லி வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் முதலில்
விரித்த பெட் கொஞ்சம் கூட கசங்காமல் கடைசி வரை கால்கேர்ள் படத்தை இயக்கி இரஇருக்கிறார். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ஒரு சஸ்பென்ஸ் காட்டி ஈடு செய்ய முயன்றாலும் திரையில் காட்டப்பட்ட காட்சிகளே மீண்டும் வசனமாக சொல்லப்படுவது தேவையற்றது.
தி பெட் – கசக்கி பிழியப்படாத கால்கேர்ள் கதை.

