Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தமிழரசன் (பட விமர்சனம்)

படம்: தமிழரசன்

நடிப்பு: விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், ஒய்.ஜி. மகேந்திரன ,யோகிபாபு , ரோபோ சங்கர் விவன், கஸ்தூரி, சங்கீதா சாயாசிங், மதுமிதா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வ ராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ் காந்த், ராஜ்கிருஷ் ணா, ராஜேந்திரன், மாஸ்டர் பிரணவ் ( இயக்குனர் மோகன் ராஜாவின் மகன்)

தயாரிப்பு:கவுசல்யா ராணி

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

இயக்கம்: பாபு யோகேஸ்வரன்

பி ஆர் ஒ: மணவை புவன்

ஏழ்மையான குடும்பத்தில்.பிறந்த தமிழரசன் ஸ்போர்ட்ஸ் கோட்டா வில் போலீஸ் ஆகிறார். மனைவி குழந்தை என்று அமைதியாக வாழ்கிறார். மகனையும் ஸ்போர்ட்சில் ஆர்வம் காட்ட வைக் கிறார். திடீரென்று மகனுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் மகன் பிழப்பான் என்று டாக்டர்கள் கூறுவதுடன் 70 லட்சம் செலவாகும் என்கின்றனர். இந்நிலையில் அதே மருத்துவமனையில் இதய மாற்று சிகிச்சைக்காக அமைச்சர் ஒருவர் சேர்க்கப்படுகிறார். வரிசைப்படி சிறுவனுக்குத்தான் முதலில் இதய சிகிச்சை அளிக்க வேண்டும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் கோல்மால் செய்து அமைச்சர் பெயரை முதலில் சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கிறது. வெகுண் டெழுந்த தமிழரசன் துப்பாக்கி முனையில் மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் மகனுக்கு  முதலில் சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று டிமாண்ட் வைக்கிறார. போலீஸ் பட்டாளம் மருத்துவமனை யை சுற்றிவளைக்கிறது. இதன் முடிவு என்ன என்பதை நெகிழ்ச்சி யுடன் கூறுகிறது கிளைமாக்ஸ்.

கிரிக்கெட் மைதானத்தில் போலீஸ் விஜய் ஆண்டனி, அதிகாரி சோனு சூட் மோதலுடன் படம் தொடங்குகி றது. பின்னர் விஜய் ஆண்டனி வேலை பார்க்கும் போலீஸ் நிலையத்துக்கே அதிகாரியாக வருகிறார் சோனுசூட். போலீஸ் ஈகோ மோதல் கதையாக இருக்கப்போகிறது என்று எண்ணும்போது முற்றிலுமாக கதைகளமே மாறி உயிருக்கு போராடும் மகனை காக்க போராடும் தந்தையின் கதையாக மாறிவிடுகிறது. போலீஸ் மோத லாக இருந்திருந்தால் வழக்கமான படமாகியிருக்கும் மாறாக உயிரை காப்பாற்ற தீவிரவாதியாக மாறி மருத்துவமனையை துப்பாக்கி முனையில் கட்டுக்குள் கொண்டு வருவதும் விஜய் ஆண்டனயின் அதிரடிக்காட்டும் போராட்டமாக மாற்றியிருப்பது நிமிர வைக்கிறது.

மகனுக்கு மாற்று இருதயம் கிடைக்காது என்று தெரிந்ததும் தன் இருதயத்தை எடுத்து மகனுக்கு வையுங்கள் என்று டாக்டர் சுரேஷ் கோபியிடம் விஜய் ஆண்டனி சொல்வது அதிர்ச்சி. அதற்கு அவரும் சம்மதித்து ஆபரேஷனுக்கு இறங்கினாலும் அது நடக்காத காரியம் என்பதை ரசிகர்களால் யூகிக்க முடிகிறது. ஆனால் விஜய் ஆண்டனி சொணபடி அவர் இதயத்தை எடுத்து மாற்றி வைத்திருந்தால் படத்தின் வெற்றி எதிர்பார்த்தால் இர்ந்திருக்கும்..

ரம்யா நம்பீசன் விஜய் ஆண்டனி மனைவியாக நெருக்கமாகவும் உருக்கமாகவும் நடித்துள்ளார். சில காட்சிகளில் உடல் பெருத்து அச்சம் தருகிறார்.

சோனு சூட் கொரோனா காலகட்டத்தில் அவர் செய்த உதவிகள். ரசிகர்கள் மனதில் அவரை ஹீரோவாக்கி விட்டது மீண்டும் அவரை வில்லனாக பார்க்க மனம் இடம் தரம மறுக்கிறது.
இருதய டாக்டராக வரும் சுரேஷ் கோபி கடைசி சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

தனி ஒருவன் பட  இயக்குனர் மோகன்ராஜா மகன் பிரணவ் இதய நோயால் பாதித்த சிறுவனாக தத்ரூபமாக நடித்துள் ளார்.

யோகிபாபு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

கவுசல்யா ராணி தயாரித்துள் ளார்.இ சைஞானி இளையராஜா பக்க பலம்.ஆ ர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு தெளிவு.

கதைக் களத்தை தந்தை மகன் சென்டிமென்ட்டாக இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மாற்றி அமைத்தது புத்திசாலித்தனம்.

தமிழரசன் சென்டிமென்ட் போராளி.

 

Related posts

ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் “விலங்கு

Jai Chandran

விக்ரம் வெற்றி: கமல்ஹாசன், லோகேஷுக்கு தயாரிப்பாளர் விஜயமுரளி வாழ்த்து

Jai Chandran

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா படுகாயம், உடன் வந்த அமெரிக்க தோழி பலி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend