Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெட்ரோல் விலை குறைப்பு மு. க. ஸ்டாலின் அறிவிப்பு: அசத்தல் பட்ஜெட்

பெட்ரோல் விலை குறைப்பு
மு. க. ஸ்டாலின் அறிவிப்பு: அசத்தல் பட்ஜெட்

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது.

தமிழக முதமைச்சராக பதவியேற்ற மு. க.ஸ்டாலின் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டதுடன் தளர்வுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்து கொரோனா பிரவலை கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்தார். பேப்பர் இல்லா நடவடிக் கையாக பட்ஜெட் முழுவதும் லேப்டாப்பில் பதிவிடப் பட்டது. எல்லா உறுப்பினர் முன்னும் லேப் டாப் வைக் கப்பட்டிருந்தது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பது சபாநாயகர் அய்யாவு விளக்கி கூறினார்.
ஆனால் பட்ஜெட் வாசிப்ப தற்கு முன்பே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் அதிமுக வினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நிதி அமைச்சர் பி.டி பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு’

*பெட்ரோல் மீதான வரி  3 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் ஆனாலும் ஏழை நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்மை அளிக்கும் என்பதால் முதல்வர் ஆணையின்படி குறைக்கப்படுகிறது. நாளை முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

* நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும். அதில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி  செய்யப் படும்.

* குடும்ப தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே  பெண்கள் உரிமைத் தொகை திட்டம் என்பது தவறான தகவல். பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை.

* மசூதிகள், தேவாலயங் களைப் புதுப்பிக்க தலா ரூ.6 கோடி.

* மொத்த வருவாய் செலவினம் – ரூ.2,61,188.57 கோடி என கணிப்பு 2021-22ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

* மகளிர் அரசு ஊழியர் களுக்கான  மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

*வேலூர், திருப்பூர், தூத்துக் குடியில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும்

*புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,725 கோடி ஒதுக்கீடு

*கொரனாவால் பெற்றோரை இழந்த 5963 குழந்தை களுக்கு ரூ.95 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

*அங்கன்வாடி மையங் களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48 கோடி

*அரசுப்பள்ளி மாணவர் களின் எண்ணிக்கை 76 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக குறைந்துள்ளது

*300 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்.

* சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.

*100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப் பணிகள் நடைபெறும். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும்.

* கனிமங்கள் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க புதிய கொள்கை உருவாக்கம். புதிய கனிம வள கொள்கை மூலம் அரசின் வருவாய் பெருமளவு அதிகரிக்கப்படும்.

*விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் படி பொங்கலுக்கு 1.81 கோடி சேலை, வேட்டிகள் வழங்கப் படும்; பள்ளி சீருடைகளுக் காக ரூ.409 கோடி ஒதுக்கீடு .

*தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.

* தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.

* காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.

* தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

*  நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.

* மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.

* குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.

* மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.

* உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.

* மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.

* சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.

* பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவ தற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு

* விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.

Related posts

படைப்புகளை உயிர்ப்பிக்கும் பின்னணி இசை – சாம் சி எஸ்

Jai Chandran

Hombale Films Expands Horizons: Steps into Overseas..

Jai Chandran

பெண்களை மையப்படுத்திய வார்டு 126

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend