Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
அன்புடையீர், வணக்கம்…
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..!
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வருகிற 29-ம் தேதி காலை 10.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் VPF கட்டணம். VPF கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை. அயல்நாடுகளில் பெரும்பாலும் VPF கட்டணம் கிடையாது. ஆனால் இங்கு தயாரிப்பாளர்கள் மீது ஒரு சுமையாக செலுத்தப்பட்டு இந்த கட்டணத்தால் சிறுபட தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, VPF கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.
அதே போல், LBT (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்யவேண்டும் என்று அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதனையும் வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
திரைத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உணர்வுள்ளவர்கள் அனைவரும் ‘கவன ஈர்ப்பு’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!
நன்றி… வணக்கம்..!
இப்படிக்கு
T.ராஜேந்தர், கௌரவ ஆலோசகர்
உஷா ராஜேந்தர், தலைவர்
JSK சதீஷ்குமார், செயலாளர்
ஆல்பர்ட், பொருளாளர்
P.T.செல்வகுமார், துணைச் தலைவர்
சிகரம் R. சந்திரசேகர், இணைச் செயலாளர்
பாபு கணேஷ்

Related posts

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு: திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran

அமீர், வெற்றிமாறன் கூட்டணியில் ”இறைவன் மிகப் பெரியவன்”

Jai Chandran

தெலுங்கு பிக்பாஸில் நடிகை பிந்து மாதவி !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend