Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூ 6,100 கோடி தொழில் ஒப்பந்தங்களுடன் துபாயிலிருந்து திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த 24-ந்தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றார். அங்கிருந்து அபுதாபி சென்றார். மொத்தம் 5 நாள் அரசு முறை பயணமாக இது அமைந்திருந்தது. முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். துபாய் நாட்டின்  பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல்மாரி, வெளிநாட்டு வர்த்தக துறை அமைச்சர் டாக்டர் தானிபின் அகமது மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது தழுகத்தில் தொழில் முதல்லிடுகள் குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் துபாயில் நடந் சர்வதேச கண்காட்சியில்  தமிழக அரங்குகளை திறந்து வைத்தார்.

துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு  அபுதாபி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அங்கும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை திரும்பினார். அவரை  துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின்பேட்டி   அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக வெளிநாட்டுப் பயணமாக துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு வந்திருக்கி றேன். என்னுடைய வெளிநாட்டு பயணம் வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது, எப்படி துபாய் ஒரு பிரமாண்டமான நாடாக உருவாகி இருக்கிறதோ அது மாதிரி என்னுடைய பயணமும் மிக பிரமாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள் கிறேன். 6 மிக முக்கியமான தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய “நோபல் ஸ்டீல்ஸ்” துறையோடு ரூ.1000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஜவுளித்துறையை சார்ந்த “ஒயிட் ஹவுஸ்” நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட் டுள்ளது. உணவுத்துறையை சார்ந்த “டிரான்ஸ் வெல்” குழுமத்துடன் ரூ.100 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மருத்துவ துறையை சார்ந்த ஆஸ்டர் டி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த “ஷெராம்” நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பி லான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த லுலு நிறுவனத்துடன் ரூ.3,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த 6 நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.6,100 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்ல் படும். இப்போது 6 மிகப் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

 

 

 

Related posts

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ பட படப்பிடிப்பு நிறைவு..

Jai Chandran

Nani’s Dasara First Single Dhoom Dhaam Dhosthaan

Jai Chandran

PothanurThabalNilayam Trilogy Part 2 first look poster

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend