Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவின் ‘கங்குவா’ பட புரோமோ டீசர்

*ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்கும், இயக்குநர் சிவா இயக்கத்தில்
மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

சென்னை (ஜூலை 23, 2023): நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ’கங்குவா’ படத்தின் பிரம்மாண்டமான புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ’கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரத்திலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று படத்தின் புரோமோ டீசரை வெளியிடுவதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மொழிகளில் விரைவில் டீசர் வெளியாகவுள்ளது. ’கங்குவா’வின் உலகம் வீரம் மிக்கதாகவும் பார்வையாளர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தையும் தர உள்ளது. மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் மையமாக இருக்கும்.

பிரமிக்க வைக்கும் காட்சிகள், காவியத்துவமான இசை, எல்லாவற்றையும் விட சூர்யாவின் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியான திரை இருப்பு கொண்ட 2 நிமிட புரோமோ டீஸர் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. இந்த பான்-இந்தியத் திரைப்படமான ‘கங்குவா’வின் உருவாக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு, பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 3டியிலும் உருவாகி வருகிறது.

சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு மற்றும் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு படத்திற்கு பெரும் பலம். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்தினை மேலும் அதிகப்படுத்தும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*
எடிட்டர்: நிஷாத் யூசுப்,
ஆக்‌ஷன்: சுப்ரீம் சுந்தர்,
வசனங்கள்: மதன் கார்க்கி,
எழுத்து: ஆதி நாராயணா,
பாடல் வரிகள்: விவேகா – மதன் கார்க்கி,
தலைமை இணை இயக்குநர்: ஆர்.ராஜசேகர்,
ஆடை வடிவமைப்பாளர்: அனு வர்தன் (சூர்யா) & தட்ஷா பிள்ளை,
ஆடைகள்: ராஜன்,
நடனம்: ஷோபி,
ஒலி வடிவமைப்பு: டி உதயகுமார்,
ஸ்டில்ஸ்: சி.எச். பாலு,
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா,
கிரியேட்டிவ் விளம்பரங்கள்: BeatRoute,
டிஜிட்டல் விளம்பரம்: டிஜிட்டலி,
VFX: ஹரிஹர சுதன்,
3டி: பிரைன்வைர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட்டட்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ஆர்.எஸ். சுரேஷ்மணியன்,
தயாரிப்பு நிர்வாகி: ராமதாஸ்,
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.வி. தினேஷ் குமார்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ.ஜி.ராஜா,
ஸ்டுடியோ கிரீன் CEO: G. தனஞ்செயன்,
இணை தயாரிப்பாளர்: நேஹா ஞானவேல்ராஜா,
தயாரிப்பு: கே.இ. ஞானவேல்ராஜா | வம்சி-பிரமோத்

Related posts

சரத்குமாரின் சமக வேட்பாளர்கள் யார் யார்? வேட்புமனு தாக்கல்பற்றி முக்கிய வேண்டுகோள்..

Jai Chandran

Announcement Video of GAAMI

Jai Chandran

மின்மினி (படவிமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend