Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்களிடம் பிரிவினை தூண்டுவதா? சோனியா, ஸ்டாலின், மம்தா கூட்டறிக்கை

மக்களிடையே பிரிவினை தூண்டுதல், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மத கலவரங்களை தடுக்காமல் பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட 14 எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இதுபற்றிய விவரம் :

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முதல்வர் (ஜேஎம்எம்) ஹேமந்த் சோரன், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேபபத்ரா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் தலைவர் மனோஜ் பட்டாச்சார்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் குன்னாலிகுட்டி, கம்யூனிஸ்ட் (எம்எல்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் திபேந்தர் பட்டாச்சார்யா ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டடறிக்கையில் கூ,றியுள்ளதாவது:

உணவு, உடை, நம்பிக்கை, திருவிழா, மொழி ஆகிய வற்றை அடிப்படையாக கொண்டு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவது, மத ஊர்வலங்களில் கலவரத்தை ஏற்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்புணர்வு தூண்டப்படு கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது. ஆயுதமேந்திய கலவர கும்பல்கள் அதிகாரவர்க் கத்தின் ஆசியுடன் செயல்படு வதை பிரதமர் மோடியின் மவுனம் உறுதி செய்கிறது.

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.

Related posts

RRR Trailer out on December 9th..

Jai Chandran

கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

Jai Chandran

‘ஆகாயம் மேலே’ பாடலுக்காக கவிஞர் தாமரைக்கு அரசு விருது..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend