Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சினம் (பட விமர்சனம்)

படம்: சினம்

நடிப்பு: அருண் விஜய், பால் லால்வானி, காளி வெங்கட், ஆர் என் ஆர். மனோகர், கே எஸ் ஜி. வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி , சித்து சங்கர்

தயாரிப்பு: மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், ஆர். விஜயகுமார்

இசை: ஷபீர் தபேரே ஆலம்

ஒளிப்பதிவு: கோபிநாத்

இயக்கம்: ஆர் என் ஆர் மனோகர்

பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா, ரேகா (டி ஒன்)

செங்குன்றம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அருண் விஜய் நேர்மையான அதிகாரி. கொலை வழக்கு குற்றவாளி ஒருவனை அடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்து வருகிறார். கோர்ட்டு வாசலில் அவனை மர்ம ஆசாமி கொலை செய்கிறான். அந்த கொலைகாரனை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை நடத்து கிறார் அருண். இதற்கிடையில் தாய் வீட்டுக்கு சென்றிருந்த அருணின் மனைவி பஸ்ஸில் ஊர் திரும்புகிறார். தான் ஒரு ஆட்டோவில் செங்குன்றம் வரை வருவதாகவும் அங்கிருந்து தன்னை டூ வீலரில் அழத்துச் செல்லும்படியும் கணவர் அருணிடம் கூறுகிறார். மனைவிக் காக அருண் காத்திருக்கிறார். நீண்டநேரம் ஆகியும் வராத நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி ஆகிறார். மனைவியை கொன்ற கொலைகாரர்களை தேடி கோபத்துடன் அலைகிறார் அருண். நீண்ட தேடுதலுக்கு பிறகு கொலை காரர்களை கண்டுபிடிக்கிறார். அவர்களை என்ன செய்கிறார் அருண் என்பது கிளைமாக்ஸ்.

ஆக்‌ஷன், நடிப்புக்கு முக்கியத் துவம் கொடுத்திருக்கும் கதாபாத் திரத்தில் அருண் விஜய் சீனுக்கு சீன் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பமே ரசிகர்களை உற்சாகப் படுத்தும் அதிரடி ஆக்‌ஷன் காட்டு கிறார். மதுபான கடையில் ரவுடித் தனம் காட்டும் குற்றவாளியையும் அவனது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்து அனைவரையும் நிமிர வைக்கிறார் அருண் விஜய்.

ஹீரோயின் பால் லால் வாணி யுடன் அருண் விஜய்யின் காதல் விளையாட்டு சிறிதாக இருந் தாலும் நயமாக உள்ளது.

மனைவியுடன் அவரது அம்மா வீட்டுக்கு செல்ல முடியாமல் அருண் கொலைகாரனை தேடி செல்வதும் பால் லால்வாணி மட்டும் குழந்தையுடன் தாய் வீடு செல்லும்போதே ஏதோ வில்லங்கம் நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. ஊர் திரும்பிய பால் லால் வாணி திடீரென்று கொலை செய்யப்  பட்டார் என்பதை அறிந்து அருண் கதறி துடிப்பது உருக்கம்.

அருண் மனைவி மீது அபாண்ட மாக இன்ஸ்பெக்டர் சித்து சங்கர் பழிபோடுவதும் அதுபற்றி விசாரிக்கும் சாக்கில் அருண் விஜய்யை நக்கலாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்து  கிறார். அடுத்தநிமிடம் அருண் விஜய்யிடம் சித்து அடிவாங்கி கை ஒடிந்து அலறுவது செம சீன்.

படத்தில் எங்கு திரும்பினாலும் அருண் விஜய்யின் ஆக்ரோஷம் தான் கண்முன் நிற்கிறது. மனைவியை வெறிநாய் போல் கடித்து குதறியவர்களை சினத்தின் உச்சத்துக்கு சென்று அடித்து கொலை செய்வது அரங்கை அப்ளாஸால் நிரப்பு கிறது.

குற்றத்தை கண்டால் கோபப்படு என்று அருண் விஜய் பேசும் கிளைமாக்ஸ் வசனம் கோழையும் வீரனாக்கும்.

போலீஸ் ஏட்டாக காளி வெங்கட் நடித்திருக் கிறார். அருண் விஜய்க்கு ஒரு நல்ல துணை கதா பாத்திரமாக எதார்த்த நடிப்பில் மிளிர்கிறார்.

ஏற்கனவே சொல்லப்பட்ட கதை தான் ஆனால் அதற்கு  சினம் என்ற கவசம்போட்டு ஆவேசம் படர இயக்கியிருக்கிறார் ஜி என் ஆர் குமாரவேலன். அருண் விஜய்யின் மனைவி லால்வாணி கொலை மர்மத்தை சஸ்பென்ஸாகவும், த்ரில்லாகவும் கடைசி வரை கொண்டு சென்றிருப்பது படத்தை தூக்கி நிறுத்துகிறது.

சமீபத்திய படங்களில் காமெடி பகுதியை இயக்குனர்கள் மிஸ் செய்துவிடுகிறார்கள். அதே மிஸ்ஸிங்கை குமாரவேலனும் செய்திருக்கிறார்.

மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிடெட், சார்பில் ஆர். விஜயகுமார் தயாரித்திருக்கிறார். மகன் அருண் விஜய்யின் நடிப்பு, ஆக்‌ஷன் மீது தந்தை விஜயகுமார் வைத்த நம்பிக்கை வீண்போக வில்லை.

ஷபீர் தபேரே ஆலம் இசை ஆரம்பத்திலிருந்தே படத்தின் வேகத்தை அதிகரித்திருக்கிறது. அருணின் ஒவ்வொரு அடியையும் இடிபோல் ஒலிக்க வைத்திருப்பது விறுவிறு. அருண் விஜய்யின் முரட்டு வாய்சில் ஒரு பாடலும் பாட வைத்திருப்பது பொருத்தம்

சீனியர் ஒளிப்பதிவாளர் கோபி நாத் கைவண்ணத்தில் இருள் சூழ்ந்த காட்சிகளும் தெளிவான லைட்டுடன் படமாகியிருக்கிறது.

நறுக்கான எடிட்டிங் இமை கொட்டாமல் பார்க்க வைத்திருக் கிறது.

சினம் – அருண் விஜய்யின் உட்சபட்ச சீற்றம்.

 

Related posts

இயக்குனர் தங்கர் பச்சான் விளக்க அறிக்கை

Jai Chandran

மகளிர் தினம்: பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டு சேலை வழங்கிய ஜெய்

Jai Chandran

மோகன்லால் போல் நடித்துள்ள விவேக் ஓபராய்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend