Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

SIIMA விருது வென்ற சான்யா ஐயர்!

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். ‘நம் அம்மா ஷாரதே’, ‘அரசி’, ‘புட்டகௌரி மதுவே’ போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘கஜா’, ‘முகபுதா’ மற்றும் ‘விமுக்தி’ போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா.

இதுகுறித்து சான்யா பகிர்ந்து கொண்டதாவது, “கன்னட மொழியில் 2025 ஆம் வருடத்திற்கான சைமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த சைமாவின் நடுவர் குழுவினர், என்மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் ரசிகர்கள், ஊடகம், என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி! நிச்சயம் கலைக்கும் சினிமா உலகிற்கும் என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை தருவேன்” என்றார்.

இந்த விருது சான்யாவின் திறமைக்காக மட்டுமல்லாது அவரின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது. நமது பாரம்பரிய மற்றும் சமகால நடனத்தில் வலுவான அடித்தளம் கொண்ட நடிகை சான்யா நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்லாது கலாச்சார முகமாகவும் இருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பில் புதிய பரிமாணத்தைத் தொடும் சான்யா இந்திய சினிமாவின் முகமாவும் இருக்கிறார்.

Related posts

ம.பொ.சியை போற்றும் படம்: இயக்குனர் போஸ் வெங்கட் ..

Jai Chandran

நானியின் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ பட செகண்ட் லுக் போஸ்டர்

Jai Chandran

GV.Prakash’s fans donated food and clothes

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend