கடந்த 2020, ம் ஆண்டு தொடக்கம் முதலே கொரோனா பரவல் ஏற்பட்டதால் தமிழகததில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை கடந்து 3வது அலை எதிர்நோக்கி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
3வது அலையை எதிர்கொள்ளும் அனைத்து மருத்துவ ஏற்பாடு .களையும் திமுக தலைவர் முதல்வர் மு. க.. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண் டுள்ளது. முதல அலை தொடக்கத்திலிருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைனில வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இது மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது
இதுகுறிதது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் கூறியதாவது:
‘பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.’ என்றார்.
தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதற்கான் ஆயத்த பணிகளை மேற்கொள்ள கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது