Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சதீஷ் சேகர் இயக்கத்தில் திகில் திரைப்படம்

ஜிபிஆர்எஸ் புரோடக்க்ஷன் தயாரிப்பில் சதீஷ் சேகர் இயக்கத்தில் பிரம்மாண்டமான திகில் திரைப்படம் உருவாபுகி வருகிறது.

ஜிபிஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் எஸ்.சிவபிரகாஷ் தயாரிப்பில் முழுக்க முழுக்க திகில் படம் இயக்க உள்ளனர். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை மற்றும் சோனியா நடிப்பில் உருவாகியிருக்கிறது. பல தமிழ்ப் படங்களை தயாரித்து வரும் எஸ்.சிவபிரகாஷ் முதல்முறையாக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார். பாகுபலி,கபாலி மற்றும் விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனும், அருள்நிதியின் டைரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ரான், எழுமின் போன்ற படங்களில் பணியாற்றிய வியன் ராஜா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். உறியடி படத்தின் கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எழுமின், மை டியர் லிசா மற்றும் அலேகா படங்களில் பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்தில் எடிட்டராக பணியாற்றுகிறார்.
மேலும் stunt இயக்குனராக ஃ‌பையர் கார்த்திக் பணிபுரிகிறார். பழங்காலக் கோவில் ஒன்றில் சிலை திருடு போக, அதைத் தொடர்ந்து பல கொடூர மரணங்கள் நிகழ்கிறது. அதற்கான காரணங்களை நாயகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இப்படம் உருவாகவிருக்கிறது.

Related posts

பி ஆர் ஓ ஆனந்த் திருமணம்: பிரேமலதா, எல்.கே.சுதீஷ் நேரில் வாழ்த்து..

Jai Chandran

லண்டனில் தமிழ்த்துறை மீளுருவாக்க ராதிகா ரூ 1 லட்சம் நன்கொடை

Jai Chandran

நடிகர் சங்கத்தினர் 1000 பேருக்கு ரஜினி உதவி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend