Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு: சரத் இரங்கல்

 

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்புக்கு  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்து இருக்கும் கீழ் அருங்குணம் – குச்சிப்பாளையம் பகுதியை கடந்து செல்லும் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை அருகில் தேங்கி நின்ற தண்ணீரில் குளிக்கச் சென்ற 3 இளம்பெண்கள் 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

கோடை காலங்களில் கிராம மக்கள் ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிப்பது வழக்கமானது என்றாலும், சுய பாதுகாப்பை உறுதி செய்வது அதைவிட முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சுமந்தா, பிரியா, நவநீதா ஆகிய பெண்களின் குடும்பத்தார்க்கும், சங்கீதா, மோனிஷா, திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய சிறுமிகளின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

ரெட்ரோ வெற்றி: சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசு

Jai Chandran

சிரஞ்சீவியின் #Chiru158 படப்பிடிப்பு தொடங்குகியது..

Jai Chandran

ஐஃபா விருதினை வென்ற சாம் சி. எஸ்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend