Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மநீம குடியரசு தின கொண்டாட்டம்

நமது 73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் 26.1.2022 அன்று காலை 8.30 மணியளவில் மாநிலச் செயலாளர்கள் திசிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், தமுரளி அப்பாஸ், திருமதி. ஸ்னேஹா மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் மாநிலச் செயலாளர் சரத்பாபு ஏழுமலை  தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாநில இணை மற்றும் துணைச் செயலாளர்கள், ஆழ்வார்பேட்டை பகுதிக்கான மாவட்டச் செயலாளர் திரு.ஓம் பிரகாஷ் மற்றும் இப்பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியக் கொடி ஏற்றியபின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தினம் பற்றிய சிறு சிறு செய்திகளையும், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றியும், இன்று தேசிய தலைநகரில் நடைபெறும் குடியரசு தின விழாவில் நம் மாநிலத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்தையும்; அதற்காக சொல்லப்பட்ட காரணங்களைப் பற்றியும் மாநிலச் செயலாளர்கள் நிர்வாகிகளுக்கு விளக்கினர்.

Related posts

சித்தரிக்கப்பட்டவை (பட விமர்சனம்)

Jai Chandran

“மூன்வாக்” குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் விழா..

Jai Chandran

Team Pushpa Wishes AlluArjun Happy Birthday

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend