சமீபத்தில் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெற்று சென்னை திரும்பினார். அவர் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்தின ருடன் அண்ணாத்த படம் பார்த்தார்.
நேற்று ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு இன்று டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அது வெற்றிகரமாக நடந்தது
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,’ ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப் பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றி கரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரஜினிகாந்த் இன்னும் ஓரு சில நாட்களில் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்’ என கூறப்,பட்டுள்ளது.