Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் “க்”

டிசம்பர் 10 திரையரங்குகளில் ரசிகர்களை அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் “க்” !

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது.

ஜீவி திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்த, இயக்குநர் பாபுதமிழ் “க்” படத்தில் மீண்டும் ஒரு புது வகை ஜானரில் ரசிகர்களை அசத்தியுள்ளார். ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் ஃபேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட த்ரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

புதுமுகங்கள் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், YG மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மனதை மயக்கும் இசையை தந்துள்ளார். பியார் பிரேமா காதல் பட புகழ் எடிட்டர் மணிக்குமரன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ‘

ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்து செல்லும் விதமாக, “க்” திரைப்படம் 2021 டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related posts

டைமண்ட் பாபுவின் 2020ம் ஆண்டு சினிமா தொகுப்பு: குஷ்பு வெளியிட சுஹாசினி பெற்றார்..

Jai Chandran

Official Trailer of EndraavathuOruNaal !

Jai Chandran

NaaiSekarReturns Wrapping up the 2nd Schedule

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend