Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிங் ரெக்கார்ட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்்தனி பாடல் வெளியீடு

*பிங் ரெக்காரட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் கூட்டணியில் முதல் சுயாதீன பாடல் 26 ஜூலை (இன்று) வெளியாகிறது*

சுயாதீன இசைக்கான (Independent Music) வரவேற்பு சமீப காலங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.

பல தளங்களில் சுயாதீன இசையை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். அந்த வழியில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கும் தளம் தான் ‘பிங் ரெகார்டஸ்’.

பிங் ரெக்கார்ட்ஸின் முதல் பாடல் 26 ஜூலை (இன்று) வெளியாகிறது. ‘கண்ணம்மா என்னம்மா’ என்ற தலைப்பை கொண்ட இந்த பாடல் பிங்க ரெக்கார்ட்ஸின் யூடியூப் சேனல் மற்றும் அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகிறது.

இந்த பாடலின் டீஸர் ஏற்கனேவ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை அமைப்பாளர் தேவ் பிரகாஷ் இசையமைத்த இந்த பாடலை பிரிட்டோ ஜே பி இயக்கியுள்ளார். ரியோ ராஜ், பவித்ரா லட்சுமி, பாலா ஆகியோர்
நடித்துள்ளனர். இவர்களுடன் இப்பாடலை சாம் விஷால் பாடியதோடு சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளர்.

 

இந்தப் பாடல் வரிகளுக்கான காணொலி (லிரிக்கல் வீடியோ), ஒத்திசைக்கப்பட்ட லிரிக்கல் வீடியோ என்னும் புதிய முறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இசை உலகத்தில் தங்களின் தனித்துவமான பாணி மூலம் பெரிதும் பேசப்பட்டு வரும் ‘நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்’ உருவாக்கியுள்ள இந்தப் பாடலின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக பிங் ரெக்கார்ட்ஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

“நல்ல இசை மற்றும் பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருடனும் பணி புரிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எங்களின் கடின உழைப்பை ஒவ்வொரு படைப்பிற்கும் தந்து அதை மக்களிடம் சரியாக கொண்டு செல்வோம்,” என்று நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் தெரிவிக்கிறது.

வருங்காலத்தில் பிங் ரெக்கார்ட்ஸ் சார்பாக இன்னும் நிறைய பாடல்கள் வெளியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாலா இயக்கத்தில் அருண் நடிக்கும் வணங்கான் சென்சார்

Jai Chandran

மாயன் FIRST LOOK

CCCinema

Kathir Next Titled as YUKI – Motion poster

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend