Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சார்பட்டா பரம்பரை பற்றி நடிகர் பசுபதி

சாரபட்டா பரம்பரை படத்திலl நடித்தது பற்றி நடிகர் பசுபதி கூறியதாவது:

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன்.

நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.
ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல.

( நான் எந்த சமூக வலை தளங்களிலும் இல்லாததால் இந்த செய்தியெய் PRO ஜான்சன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். )
இவ்வாறு பசுபதி கூறியுள்ளார்.

Related posts

டங்கி இந்தியாவில் 100 கோடி கடந்த வசூல்

Jai Chandran

32- ஆண்டு சேவை மகாராஷ்டிரா ரஜினி மன்ற தலைவர் ஆதிமூலத்துக்கு விருது

Jai Chandran

யூடியூப் பிரபலம் சுதாகர் திடீர் திருமணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend